Category tamil news

எரிமலை வெடிப்பு – இந்தோனேசியாவின் பாலிக்கு செல்லும் பல விமானங்கள் ரத்து! – Global Tamil News

எரிமலை வெடிப்பு காரணமாக இந்தோனேசியாவின் பாலிக்கு செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்ததால், பாலிக்கு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் மற்றும் புகையால், விமானப் போக்குவரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியா மற்றும் பிற நாடுகளிலிருந்து பாலிக்கு செல்லும் விமானங்களும்…

யாழில். இந்த வருடத்தில் 50 பேருக்கு டெங்கு! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 50 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் இது வரையிலான கால பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம் டெங்கு காய்ச்சலுக்காக 50 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவன் ஊடாகவே டெங்கு காய்ச்சலில்…

செம்மணிப் புதைகுழி நீட்சி அறியப்பட வேண்டும்! – Global Tamil News

செம்மணிப்புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இனமுரண்பாடு தோன்றிய பின்னர் சிறுபான்மையின மக்கள் பல வழிகளிலும் பாதிப்புகளை எதிர் கொண்டனர்.…

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோக பணி ஆரம்பம்! – Global Tamil News

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனாக் காலத்தின்போதும், அதற்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிகளின் போதும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் வழங்கலில் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. அத்துடன் உரிய களஞ்சிய சாலை வசதிகளும் காணப்படவில்லை. இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் காங்சேன்துறையிலுள்ள எரிபொருள் விநியோக களஞ்சியசாலையின் திருத்தப் பணிகள்…

உணவருந்திய பின்னர் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் வீட்டில் உணவருந்திய பின்னர் மயங்கி சரிந்த  கந்தர்மடம் பகுதியை சேர்ந்த கேதீஸ்வரன் எனோக்ஹசான் 20 வயதுடைய  இளைஞன் உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் நேற்றைய தினம் (17.6.25) உணவருந்திய நிலையில் மயங்கி சரிந்துள்ளார். அதனை அடுத்து வீட்டார் இளைஞனை யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.…

வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்! – Global Tamil News

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (18.06.25) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 16…

யாழில் கடுமையான காற்று – 12 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வீசும் கடுமையான காற்று காரணமாக 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 04 குடும்பங்களை சேர்ந்த 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை…

யாழ். பாடசாலைகளிலும் உளவளத்துணையின் செயற்பாடுகளின் தேவைப்பாடு உள்ளது – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் தற்போது உள ஆற்றுப்படுத்தலின் தேவைப்பாடுகள் அதிகம் உணரப்பட்டுள்ளது. பாடசாலைகளிலும் உளவளத்துணையின் செயற்பாடுகளின் தேவைப்பாடு உள்ளது என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். உளவளத்துணை  மற்றும்  உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக  மன்ற கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச்…

நயினாதீவு கொடியேற்றம் 26ஆம் திகதி – முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் – Global Tamil News

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி  அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும்26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 11 ஆம்…

யாழ்.மாவட்டத்திற்கு எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருகிறது – Global Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதாக யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  264,000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  நாளைய…