Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு…
யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைவஸ்து கலந்த மாவா பாக்குடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்…
ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பிரபல மருத்துவமனையான சொரோகா மருத்துவமனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல்…
டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது. ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று (19) வழக்கமான தீ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது ராக்கெட்டின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகள் தீப்பிழம்புகள்…
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த நிலையில் நேற்றைய தினம் (18.06.25) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அவர்களை சந்தித்த தூதுவர் , அவர்களின் குறைகளையும் நீதிக்கான போராட்டத்தையும் கேட்டறிந்தார். அத்துடன் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை இங்கிலாந்து தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் என உறுதி அளித்தார். குறித்த…
இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் நாகரிகம் கலாச்சாரம் மற்றும் புவியியல் உறவுகளை மேம்படுத்த எல்லைகள் கடந்து சுற்றுலா துறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என இந்திய துணை தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை சுற்றுலா உறவுகளை வலுப்படுத்த இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த “சுற்றுலா மாநாடு – 2025 ” யாழ்ப்பாணம்…
யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கணவன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கணவன் மனைவி ஆகியோர் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் காவற்துறைனர் மேற்கொண்ட விசாரணைகளில் பருத்தித்துறை…
கரைச்சிப் பிரதேச சபையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன் தலைமையில் பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (19.06.25) ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை…
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் வடலி தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தமுத்து புஸ்பராசா (வயது 80) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் தனிமையில் வசித்து வந்த நிலையில், முதியவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , அயலவர்கள் மானிப்பாய் காவற்துறையினருக்கு தகவல் வழங்கினர். அதனை…
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு…