Category tamil news

திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் காரைக்காலில் இருந்து பிறிதொரு இடத்திற்கு மாற்றம்! – Global Tamil News

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட  பகுதியில் நிலவிவரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக விரைவில் பிறிதொரு இடத்தில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபை அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (19.06.25)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

யாழில். ஆலயத்திற்கு செல்ல தயாரான பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த பெண்ணொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் காரைநகர் களபூமியை சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார். ஆலயத்திற்கு செல்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை (19.06.25) வீட்டில் தயாராகிக்கொண்டிருந்த வேளை, திடீரென மயங்கி விழுந்துள்ளார். வீட்டில் இருந்தோர் அவரை உடனடியாக காரைநகர் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்…

வலி மேற்கு தவிசாளராக சண்முகநாதன் ஜெயந்தன்! – Global Tamil News

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவாகியுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 26…

கட்சி மாறி வாக்களித்து விட்டதாக கதறல் – கட்சி உறுப்புரிமை இடை நிறுத்தம்! – Global Tamil News

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட மா.குமார் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச்…

வலிகாமம் தெற்கு பிரதேச சபை தமிழரசு வசமானது! – Global Tamil News

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு…

மாவா பாக்குடன் இளைஞர் ஒருவர் கைது! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைவஸ்து கலந்த மாவா பாக்குடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்…

இஸ்ரேல் மீது ஈரான் பாரிய ஏவுகணைத் தாக்குதல் – பிரதான மருத்துவமனை சேதம்! – Global Tamil News

ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பிரபல மருத்துவமனையான சொரோகா மருத்துவமனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல்…

ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது! – Global Tamil News

டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது. ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று (19) வழக்கமான தீ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது ராக்கெட்டின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகள் தீப்பிழம்புகள்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நீதிக்கான போராட்டம் தொடர்பில் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்! – Global Tamil News

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த நிலையில் நேற்றைய தினம் (18.06.25) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அவர்களை சந்தித்த தூதுவர் , அவர்களின் குறைகளையும் நீதிக்கான போராட்டத்தையும் கேட்டறிந்தார். அத்துடன் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை இங்கிலாந்து தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் என உறுதி அளித்தார். குறித்த…

இலங்கை – இந்திய சுற்றுலாத்துறை எல்லைகள் கடந்து மேம்பட வேண்டும்! – Global Tamil News

இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் நாகரிகம் கலாச்சாரம் மற்றும் புவியியல் உறவுகளை மேம்படுத்த எல்லைகள் கடந்து சுற்றுலா துறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என இந்திய துணை தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை சுற்றுலா உறவுகளை வலுப்படுத்த இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த “சுற்றுலா மாநாடு – 2025 ” யாழ்ப்பாணம்…