Category tamil news

யாழில். சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் – மூவர் வாள்களுடன் கைது! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதயபுரம் பகுதியில் சகோதரர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். அது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபர்களால் யாழ்ப்பாண காவல்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி சாதனை.! – Global Tamil News

கல்வி அமைச்சினால்  நடத்தப்பட்ட தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில்  பிரிவு 8,9 ல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி   மாணவி செல்வி. அ. நயோலின் அப்றியானா மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று    சாதனை புரிந்துள்ளார். அவருக்கு சான்றிதழ் கல்வி அமைச்சில்…

காணி விடுவிக்க கோரி போராட்டம்! – Global Tamil News

வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் மயிலிட்டி சந்தியில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த அமைதிவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட தனியார் காணிகள் கடந்த 30…

செம்மணியில் அணையா விளக்கு! – Global Tamil News

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி மூன்று நாட்கள் அணையா தீபம் என தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி திங்கட்கிழமை காலை முதல் புதன்கிழமை…

சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு! – Global Tamil News

பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (21.06.25) ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வடக்கு மாகாண…

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் காவற்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

கைதான வைத்தியரின் முறைகேடு குறித்து தகவல் திரட்டுவதாக ஆணைக்குழு அறிவிப்பு! – Global Tamil News

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பின்னர் இழப்பு ஏற்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த வைத்தியர் சமீபத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை…

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்! – Global Tamil News

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில்…

அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயார் – UNICEF. – Global Tamil News

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகள் இடையே நேற்று (20.06.25) பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பான எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்து இதன்…

நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை! – Global Tamil News

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி ,அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு  யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த நிலையத்தால் , அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மருத்துவ, இலத்திரனியல், இரசாயன , பொலித்தீன்,  பிளாஸ்டி உள்ளிட்ட…