Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருந்தது. இந்த தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை ஈரான்…
ஈரான் – இஸ்ரேல் நாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, 15 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம…
குழந்தை சத்திர சிகிச்சை நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் பா.சயந்தன் எழுதிய குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான மூன்று நூல்கள் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கென யாழ் நகரில் அமைக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர்கள் தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த மூவர் தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தமிழகத்திற்கு தப்பி செல்ல முற்பட்ட வேளை, தலைமன்னார் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,…
போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது…
ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஐ.நா சாசனம், சர்வதேச சட்டம்…
செம்மணி என்றால் , கூடவே புதைகுழி என்பதும் நிச்சயமாக ஞாபகம் வரும். அந்தளவுக்கு செம்மணி புதைகுழி இலங்கையை 90களின் பிற்பகுதியில் உலுக்கி இருந்தது. மீண்டும் சுமார் 27 வருடங்களின் பின்னர் செம்மணி பகுதியில் உள்ள சிந்துபாத்தி மயானமும் அதனை சூழவுள்ள பிரதேசமும் மனித புதைகுழியாக யாழ் . நீதவான் நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. செம்மணி. யாழ்ப்பாணம் –…
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ”செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள்…
யாழ்ப்பாணத்தில் லிப்ட் விபத்தில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை 921.06.25) உயிரிழந்துள்ளார். நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் பணியாளராக டிலக்சன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். விடுதியில் பணியில் இருந்த போது , மேல் தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் ஏறிய போது , லிப்டினுள் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அதனை அடுத்து , சிகிச்சைக்காக…