Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் , உணவகங்கள் என்பன பொது சுகாதார பரிசோதகரினால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன அதன் போது, பலசரக்கு கடை ஒன்றில் இருந்து , காலாவதியான பொருட்கள், சுட்டுத்துண்டு இன்றிய பொ (23.06.25)ருட்கள்…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை…
பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். செம்மணி பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (23.06.25) ஆரம்பிக்கப்பட்டுள்ள அணைய தீபம் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி இரணைமடு பகுதியை சேர்ந்த…
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரவு உணவருந்தி விட்டு உறக்கத்துக்குச் சென்ற இவரைக் காலையில் காணவில்லை என்றும், அவரைத் தேடிய போது கிணற்றில் சடலமாக காணப்பட்டார் என மரண விசாரணைகளில்…
நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளராக இருந்த மஹிந்த சிறிவர்தன குறித்த பதவியை சமீபத்தில் இராஜினாமா செய்ததோடு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக இயக்குனராக பதவியேற்கவுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற…
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “அணையா விளக்கு” தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் காலை 10.00 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று, மத தலைவர்களின் ஆத்ம உரை இடம்பெற்றது. மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான…
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று (23) காலை 8.30 மணிக்கு நீதி அமைச்சரின் தலைமையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து வந்த அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்கள்,…
சுமார் 3.69 மில்லியன் ரூபாய் வருமான வரி செலுத்தாததற்கு எதிராக உள்நாட்டு வருவாய் ஆணையர் தாக்கல் செய்த வழக்கில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை கைது செய்து முன்னிலைப்டுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (23.06.25) பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. 2010-2012 ஆண்டுகளுக்கான தொழிலதிபர் வாஸ் குணவர்தன வருமான வரி…
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை (22.06.15) நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் அதிபராக இருந்த…
ஈரானிய அணு நிலைகள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதலை அடுத்துப் போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்தப் பிராந்தியம் ஊடான சிவிலியன் விமான சேவைகளின் பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன. சில ஐரோப்பிய நாடுகளது விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கின் கட்டார், டோஹா போன்ற பிரதான…