Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24.06.25) இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (23.06.25) அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் ஆரம்பமானது. நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை…
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24.06.25) நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். நான்காவது நாளான இன்றைய தினம் காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர். காணிகளை விடுவிக்க கோரி கடந்த…
மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணி அளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் நடைபெற்றது. இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக தமிழ்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் பூர்த்தியாகுவதையோட்டி பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாசும் கௌரவ விருந்தினராக சட்டத்தரணி மாலா சபாரத்தினமும் சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி பி.என்.தம்புவும்…
மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மன்னார் நகர சபையில் நடைபெற்றது. இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம்…
யாழ்ப்பாண மாவட்ட செயலராக நியமனம் பெற்றுள்ள மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24.06.25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன் போது, மத குருமார்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் செயலராக மருதலிங்கம் பிரதீபனுக்கு கடந்த 20 ஆம் திகதி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. மருதலிங்கம் பிரதீபன்…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜூன் 23 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான…
ஈரான்-இஸ்ரேல் போருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த காலத்தில் இஸ்ரேலின் பல பகுதிகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், போர்…
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய அமைச்சர் விஜேபால, இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகக் குறிக்கவில்லை என்று கூறினார். இந்த…