Category tamil news

35 ஆண்டுகளின் பின் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதி வழங்கிய இராணுவம் – உயர் பாதுகாப்பு வேலிகளும் பின் நகர்த்தல்! – Global Tamil News

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. கடந்த 35 வருட…

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து குழந்தையின் எலும்புக் கூட்டு எச்சம் உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு! – Global Tamil News

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) முன்னெடுக்கப்பட்டது. நேற்றைறைய  அகழ்வு பணிகளின் போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா ஆணையாளரிடம் கோரிக்கை! – Global Tamil News

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள்…

“போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்” சங்கானையில் போராட்டம்! – Global Tamil News

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி, எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவைதானா?, அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே, மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் ஆரம்பம்! – Global Tamil News

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று, 14ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஜூலை 09ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள்…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுமா? – Global Tamil News

யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குவோ வாரண்டோ ரிட் மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (26) தொடங்கியது. அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன்…

கெஹெலிய வழக்கின் சாட்சியாளராக ரணில், டக்ளஸ் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டனர்! – Global Tamil News

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்டோர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 350 பேர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி…

வலி. வடக்கில் விடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தின் முன்னரங்க வேலிகளை நகர்த்த கோரிக்கை! – Global Tamil News

வலி வடக்கில் விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் , யாழ் . மாவட்ட கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார இன்றைய தினம் வியாழக்கிழமை ஆளுநர்…

செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில்! – Global Tamil News

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை  காலை 10 மணிக்கு (23.06.25)  , யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு , தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூன்றாம் நாளான நேற்றைய…

கல்கிசை – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி முதல் ஆரம்பம்! – Global Tamil News

யாழ்ப்பாணம் – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களால்…