Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நல்லூர் பிரதேச சபையின் முதல் அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.06.25) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. சபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சபைக்கு சென்ற தவிசாளர் , பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும். பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் மாலை…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Spread the love இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுகைதுநிஷாந்த விக்ரமசிங்கவிமானங்கள் கொள்வனவுஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று வெள்ளிக்கிழமை (27.06.25)) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலி தற்றதாக்கும் வகையில் இந்த தடை உத்தரவு…
பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் நேற்று மாலை (26.06.25) ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. கடந்த 35 வருட…
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) முன்னெடுக்கப்பட்டது. நேற்றைறைய அகழ்வு பணிகளின் போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள்…
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி, எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவைதானா?, அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே, மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை…
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று, 14ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஜூலை 09ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள்…
யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குவோ வாரண்டோ ரிட் மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (26) தொடங்கியது. அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன்…