Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர்நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (1.07.25) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத்துதவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். -குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், மாந்தை மேற்கு பிரதே சபை தவிசாளர் ஞானப்பிரகாசம்…
செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் , இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.06.25) முன்னெடுக்கப்பட்டது. செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம்…
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் இன்றைய தினம் செவ்வாய்க்க்கிழமை (01.07.25) மாவட்ட செயலர் ம பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.…
மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (01.07.25) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற…
காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற மக்கள் நெரிசலான இடங்கள் நேற்று (30) கடுமையான தாக்குதலினால் பாதிக்கப்பட்டன. காசாவின் கடற்கரையில் இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா வைத்தியசாலை மீது…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றில் இன்று (02.07.25) முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை…
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் 35 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை (30.06.25) இடம்பெற்றது. யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கடந்த 35 ஆண்டுகளாக கொடியேற்ற நிகழ்வு நடைபெறவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இம்முறை மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் கொடியேற்றத்துடன்…
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவானார். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக்…
தெற்கில் ராஜபக்சக்கள் எவ்வாறு மதவாதம், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றினார்களோ, அதையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் செய்கின்றார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இப்போது மக்களை உசுப்பேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் என நெடுச்சாலைகள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (29.06.25) பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து…
கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (29.06.25) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா , க,இளங்குமரன் , வலி. வடக்கு…