Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று (ஜூலை 14) காலையில் தனது 87 வது வயதில் காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். கடந்த ஐம்பது ஆண்டு ண்டு காலமாக தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிககையாக வலம் வந்த சரோஜாதேவி…
லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறியரக விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் ஹட்விக் விமான நிலையத்தை நோக்கி, 242 பேருடன் கடந்த மாதம் 12 ஆம் திகதி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம்,…
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13 கைது செய்யப்பட்ட 07 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக…
மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த கள விஜயம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது குறித்த கள விஜயதில் வனவள மற்றும் வன ஜீவராசிகள்…
தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என நாடாளுமன்ற் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2021 ஜனவரி மாதம் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும்…
போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி காவற்துறையினர், யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது, வீதியில் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்து…
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுமாறு காவற்துறை மற்றும் கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது…
யாழ்ப்பாணம் – எழுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று (12.07.25) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதி கொண்ட சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. குறித்த கடல் பகுதியில் மிதக்கும் சந்தேகத்திற்கிடமான பையொன்று கண்காணிக்கப்பட்டு ஆய்வு…
வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய மருத்துவமனைகள், உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தாதியர்களை நியமிப்பதன் மூலம் குறித்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். நயினாதீவு பிராந்திய மருத்துவமனையில் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில்…
போலி இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு எதிரான விசாரணையில் சாறுகளாக செயல்படும் 2000 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்களை அச்சிடுவதற்கான செலவை ஏற்க குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆவணத்தை அச்சிடுவதற்கான மொத்த செலவு சுமார் 1.5 மில்லியன் ரூபாய் என அரசு அச்சகத் துறை முன்னதாக மதிப்பிட்டிருந்தது.…