Category - வவுனியா

1
கிவுள் ஓயாத்திட்டம்:வலுக்கும் எதிர்ப்பு!
2
கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு – வவுனியாவில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம்
3
கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்!

கிவுள் ஓயாத்திட்டம்:வலுக்கும் எதிர்ப்பு!


வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமது நிலைப்பாட்டை அரசிற்கு முன்வைக்கவேண்டுமென வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் கோரியுள்ளன.கிவுள் ஓயாத்திட்டம் வவுனியாவில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக தமிழ்மக்களுக்கு பாரிய ஒரு பின்விளைவை ஏற்ப்படுத்தக்கூடிய திட்டமாக நாங்கள் சந்தேகப்படுகின்றோம்.கிவுள் ஓயாத்திட்டத்திட்டம் தொடர்பாக எமக்கு இருக்கும் சந்தேககங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை .எனவே நாங்கள் அதனை எதிர்க்கின்றோம். தொடர்பாக அனைத்து தமிழ்கட்சிகளோடும் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம். அனைத்து கட்சிகளும் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளதாக சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.இதனிடையே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.மீண்டும் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் என நானும் பொதுச்செயலாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அந்த அழைப்பினை தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டணியை பொறுத்தவரையில் அவர்கள் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. பரந்த மனப்பான்மையுடன் எங்களுடன் பேசினார்கள். அவ்வாறானதொரு நிபந்தனையற்ற இணைவுகள் ஏனையவர்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கின்றோமெனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு – வவுனியாவில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம்


அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகளினால் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது.தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து கிவுல்ஓயா திட்டமானது அரசாங்கத்தின் மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீட்டோடு மேற்கொள்ளப்பட உள்ளது.இந்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வடக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.கிவுல்ஓயா திட்டம் தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்து கிளம்பியுள்ள நிலையில் அரசாங்கம் தொடர்ந்தும் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்!


கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில்  கிவுல்ஓயா திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.வவுனியாவில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பணியகத்தில் நடந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியலிங்கம், ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், கிவுல் ஓயா திட்டத்தை கைவிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், வரும் 30ஆம் நாள் நெடுங்கேணியில் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2026. Created by Meks. Powered by WordPress.