Category யாழ்ப்பாணம்

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது யாழ்ப்பாணத்தில் 75 போதை மாத்திரைகளுடன் 18 வயதான இளைஞன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 10 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.  அதனை தொடர்ந்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்…

யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் – சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள்…

யாழில். இடுகாட்டை வாங்கிய தனியார் – தமது உறவுகளின் கல்லறைகளை பாதுகாக்க கோரும் உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து , அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்  சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. …

செம்மணியில் அகழ்வாய்வு – நிதி விடுவிப்பில் இழுபறி

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வு பணிகளை முன்னெடுக்க நிதி விடுப்பில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுவதாக யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானம் ஒன்றில் மின்தகன மேடை அமைப்பதற்காக குழி தோண்டிய போது மனித என்புக்கூட்டு சிதிலங்கள்…

ஒற்றையாட்சிக்குள் தீர்வு சரிவராது; மோடிக்கும் எடுத்துரைத்தோம்

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இந்திய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…

மோடி சந்திப்பு சுய இன்பமாம்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிபோது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலோ 13வது திருத்தம் தொடர்பிலோ வாயே திறக்கவல்லையென தெரியவந்துள்ளது  ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக மோடி, எக்ஸ்…

வடக்கில் 16,000 பேருக்கு தொழில்வாய்பு

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க…

இந்திய மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு – நன்றி தெரிவித்து யாழ் . மீனவர்கள் இருவரை விடுவித்த இந்தியா

இலங்கை அரசாங்கம் 11 இந்திய மீனவர்களை விடுவித்தமைக்கு நன்றி தெரிவித்தும். இலங்கை – இந்திய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 யாழ்ப்பாண மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காக கடலுக்கு சென்ற ஞானராஜ் மற்றும் பூலோகன் ஆகிய…

யாழ் . சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில்  ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட…

நாக பாம்பை பிடிக்க முற்பட்டவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்து, பாம்பினை காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  புத்தூர், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் சர்மா என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு, இவரது வீட்டின் முற்றத்தில் காணப்பட்ட வலைகளுக்குள் நாக பாம்பு ஒன்று சிக்கி தவித்துக்கொண்டிருந்ததை அவதானித்து , வலைகளுக்குள் சிக்கி…