Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13.30 மணியிலிருந்து 17.00 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு: …
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்றவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை , முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய…
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும்,…
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு…
செம்மணி பகுதியில் உள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில், நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் பொழுது மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து அடையாளப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதக்கொலை விசாரணைப் பிரிவு நீதிமன்றுக்குச் செய்த விண்ணப்பத்தின் பிரகாரம்,…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்ந்தும் அந்தரத்திலேயே இருந்துவருகின்றது. இதனிடையே உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. மனு, இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள்; முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா…
செம்மணி மனிதப் புதைகுழிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் போது, இன்று வெள்ளிக்கிழமை புதிதாக மேலும் 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளில் 7 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில், மொத்தமாக 47 எலும்புக்…
யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 140க்கும் அதிகமான படகுகள் மயிலிட்டி கடற்பரப்பினுள் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும்…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 07 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 47 எலும்புக்கூட்டு…
செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்ற புலனாய்வு பிரிவின் மனித கொலை விசாரணை பிரிவின் , நிலைய பொறுப்பதிகாரி யாழ் . நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …