Category யாழ்ப்பாணம்

யாழ்.போதனா வைத்தியரின் பணத்தை திருடிய குற்றத்தில் கைதானவருக்கு பிணை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் கைதான வைத்தியசாலை பணியாளர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  வைத்தியரின் உடைமையில் இருந்த பணம் காணாமல் போனமை தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வைத்தியரால் முறைப்படு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்  வைத்தியசாலை பணியாளர் ஒருவரை…

யாழ் . பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக விளக்கமறியலில் உள்ள பெண் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் மோசடி வழக்கில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.  யாழ்ப்பாண விசேட குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது…

யாழில். அதிகரித்த வெப்ப நிலையில் யோக்கட் எடுத்து சென்றவருக்கு 30 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன்,  கைப்பெற்றப்பட்ட யோக்கட்களையும் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. யோக்கட்களை 06 செல்சியஸ் வெப்ப நிலையில் கூலர் வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் அதன் வெப்ப நிலையை அதிகரித்து 18 செல்சியஸ் வெப்ப நிலையில்…

யாழில். புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆயிரம் தண்டம்

புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி. அஜந்தன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட…

வவுனியாவில் 5 உணவகங்களுக்கு சீல் – பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்

வவுனியாவில் உடல்நலத்திற்கு ஒவ்வாத வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட 05 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , காலாவதியான பொருட்களை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  வவுனியா தெற்கு இரட்டைபெரியகுளம் பகுதியில், புத்தாண்டு தினத்தன்று அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரால் , உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவை…

யாழில் 21 ஆயிரத்து 064 பேர் அஞ்சல்  மூலம் வாக்களித்கத் தகுதி

உள்ளூர் அதிகார சபைகள்   தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்புக்கள் இடம்பெற்றதாக மாவட்ட செயலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது.  யாழ்பாண  மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல்  மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்காக யாழ்ப்பாணத்தில் 292 அஞ்சல் மூல வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.  நாளைய தினம்…

யாழில். 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,   நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை…

யாழில். தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் தொடர்பாக 52 முறைப்பாடுகள்

ஆதீரா Thursday, April 24, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை வரை, தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 52 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.…

கஜேந்திரகுமார் அணிக்கே எமது ஆதரவு – யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம்

தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்…

தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன் ,  வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  காங்கேசன்துறை பகுதியில் பெரியளவிலான தங்குமிடம் ஒன்றினை அமைத்து வரும் நபர் ஒருவரின் உறவினர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பழை…