Category யாழ்ப்பாணம்

யாழில். தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டதை அடுத்து இணுவில் பகுதியில் , வெற்றி பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் வெடி கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன் போது, குறித்த தேர்தலில் தோல்வியுற்றவரும்…

யாழில்.காய்ச்சலால் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நான்கு  நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பரந்தாமன் லக்சன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.  குறித்த இளைஞன் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். …

யாழில். மரஅரிவு இயந்திரத்தினுள் சிக்கியவர் உயிரிழப்பு

யாழில். மரஅரிவு இயந்திரத்தினுள் சிக்கியவர் உயிரிழப்பு ஆதீரா Thursday, May 08, 2025 யாழ்ப்பாணம் யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42)  என்பவரே உயிரிழந்துள்ளார்.  தனது வீட்டில் மர அரிவு…

யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரிலும்

யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ்  இன் புற நகர் பகுதியான Villeneuve  Saint- Georges எனும் இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பல தமிழ் தலைவர்களதும், கல்விமான்களதும் அயராத முயற்சியினால்,…

58 இல் 40: சுமந்திரன் பெருமிதம்!

மாற்றம் என்ற அலைக்குள் மக்கள் அள்ளுண்டு விடுவர் என பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில் நாம் இம்முறை 58 சபைகளில் போட்டியிட்டு 40 சபைகளின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் பெருவெற்றி பெற்றுள்ளோமென இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

யாழ்.மாநகரசபை தக்க வைக்க பின்கதவு பேரம்?

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் களத்தில் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அதேவேளை தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மீண்டும் மீள் எழுச்சியடைய தொடங்கியுள்ளன. அவ்வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி  நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 63,327 வாக்குகளில் இருந்து 88,443 எனக் கூடிய முறையில் வாக்குகளை பெற்றுள்;ளது. அதே வேளை தேசிய மக்கள்…

யாழில் கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் கஞ்சாவுடன் மூவர் கைது யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 323 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பேசாலை என்றும் ஏனைய இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார்…

தமிழ் தேசியத்தின் இருப்பு உறுதியாகியுள்ளது

நடைபெற்று முடிந்த தேர்தல் அனுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருபை உறுதி செய்துள்ளது என தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்  மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியத்தை…

யாழ்ப்பாண தேர்தல் முடிவுகள்

யாழ்ப்பாணம் மாநகர சபை  தமிழ் தேசிய பேரவை – 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி – 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி…

எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் ஆணை தந்துள்ளார்கள்

ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாக பார்க்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறை நகரசபையின்…