Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை நேற்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே…
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்படவுள்ளன. இதன்போது பொதுமக்கள் குறித்த சான்றுப் பொருட்களைப் பார்வையிட்டு அது பற்றிய தகவல்கள் தெரிந்திருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கோ, நீதிமன்றுக்கோ குறிப்பிட முடியும். இந்நிலையில்…
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை யானைத் தாக்குதலில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது. உயிரிழந்த பெண் மகிழவெட்டுவானைச் சேர்ந்த ரவிச்சந்திரன் பசுபதி (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீட்டு முற்றத்தில் தனது…
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன்னர் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஓமந்தை சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்து…
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு , கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடற்படையினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் போது, பொதி செய்யப்பட்டு…
செம்மணிப் பகுதியில் உள்ள இரண்டு பகுதிகளில் இருந்தும் இன்றைய தினம் (04) திங்கட்கிழமை புதிதாக 05 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 06 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில், 61 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து…
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜீ.பி.ஆர் ரக அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டது. எனினும் அதற்கான அனுமதி…
செம்மணி கொலையாளிகளுள் ஒருவனான சோமரத்ன ராஜபக்ச சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது முன்னாள் துணை ஆயுதக்குழுக்களிடையேயும் பீதியை தோற்றுவித்துள்ளது. கொலையாளியின் அறிவிப்பு செம்மணி விவகாரத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக…
சோமரத்ன ராஜபக்ஷ எழுதிய கடிதம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார். செம்மணி படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தினால் தான் சாட்சியமளிக்க தயாராக உள்ளேன் என்று கிருஷாந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தனது மனைவி மூலம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,…
செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை …