Category யாழ்ப்பாணம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான…

காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானிக்கு எதிர்ப்பு: மே 29 பாரிய போராட்டத்திற்கு சுமந்தரன் அழைப்

வடக்கின் கரையோர பிரதேச காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 ஆம் திகதி  பாரிய போராட்டம் நடத்தப்படும் என இலங்கை தமழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கின் கரையோர…

நாகையில் இருந்து யாழுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்தவர் கைது

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்திய பிரஜையை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.  கப்பலில் வந்தவர்களை காங்கேசன்துறை துறைமுக சுங்க பிரிவினர் சோதனையிட்ட போது, இந்திய பயணி ஒருவரின் உடைமையில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கிராம் குஷ் ரக…

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது,…

யாழில் சங்கு கூட்டணியை தனித்தனியே சந்தித்த வீடும் , சைக்கிளும்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள  தமிழ் தேசிய கூட்டணி இணைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இல்லத்தில்…

யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினராலும் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இன்றையதினம் வழங்கப்பட்டது. வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி…

வடக்கில் ஏழு உயரதிகாரிகளின் பதவிகள் பறிப்பு – ஆளுநர் அதிரடி

பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் பறிக்கப்பட்டுள்ளன.  வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், ஒரு நகரசபைச் செயலாளர் மற்றும் மூன்று…

படகில் யாழ்ப்பாணம் வந்தவர்களும் , அவர்களை அழைத்து வந்தவர்களும் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய…

செம்மணியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன.  இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி…

யாழில். தாதிய மாணவர்களின் நடைபயணம்

யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ். தாதிய கல்லூரியும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய தாதியர்களின் நலனை மேன்படுத்தும் நடைபயணம் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.   யாழ். தாதிய கல்லூரியின் முன்றலில் ஆரம்பமான நடைபயணமானது மணிக்கூட்டு கோபுர வீதியூடாக யாழ். பொதுநூலகம் வரை சென்று, அங்கிருந்து கண்டி பிரதான…