Category யாழ்ப்பாணம்

வலிகாமம் கிழக்கில் சிறார்களும் விளக்கேற்றி அஞ்சலி

இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன்,  வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி ஞானவாணி சனசமூக நிலையத்தில்  சனிக்கிழமை (17) மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. சமூக செயற்பாட்டாளர் சிவராசா ரூபன் தலைமையில் அஞ்சலி சுடரினை போரில் மகனை இழந்த தந்தை எஸ். சுந்தரவேல்…

தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு நல்கியவர்கள் இன்றைய அரசாங்கத்தின் தலைமைகள்

அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலைகள் அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ள நிலையிலும் சிறுவர் விடயத்தில் ஏனும் பொறுப்புக்கூறவோ அல்லது நீதியை நிலைநாட்டவோ அரசு தயாரில்லை. கொல்லப்பட்டவர்கள் தமிழ்க் குழந்தைகள் என்பதால் அதுபற்றிய குறைந்தபட்ச விசாரணையைக்கூட மேற்கொள்ள தயாரில்லை. இது நன்கு திட்டமிட்ட இனப்படுகொலை என…

யாழில்.119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  பொலிசாரின் 119 தொலைபேசி இலக்கத்திற்கு நபர் ஒருவர் அழைப்பினை மேற்கொண்டு , குடும்ப தகராறு என கூறி அவசரமாக பொலிசாரின் உதவியை…

யாழில். மணமாகி இரு வாரத்தில் மணப்பெண் உயிர்மாய்ப்பு

யாழில். மணமாகி இரு வாரத்தில் மணப்பெண் உயிர்மாய்ப்பு ஆதீரா Sunday, May 18, 2025 யாழ்ப்பாணம் திருமணமாகி இரண்டு வாரத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணொருவரே நேற்றைய தினம் சனிக்கிழமை தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார்.  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்…

யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி

இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன்,  வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி – ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. சமூக செயற்பாட்டாளர் சிவராசா ரூபன் தலைமையில் அஞ்சலி சுடரினை போரில் மகனை இழந்த தந்தை எஸ்.…

கடல் வழியாக தாயகம் திரும்பியவர்கள் விளக்கமறியலில்

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்களையும் அவர்களை படகில் அழைத்து வந்த இரு படகோட்டிகளையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில்…

செம்மணியில் மனித புதைக்குழி எனும் சந்தேகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகள் இடை நிறுத்தம்

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் மனித புதைகுழி எனும் சந்தேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணிகள் மழை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.  அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995,…

வலி. வடக்கு காணிகளை விடுவிக்க கோரி மகஜர் கையளிப்பு

வலி வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக்கோரி பொதுமக்களால் வடக்கு ஆளுநரிடம் இன்றைய தினம் சனிக்கிழமை மகஜர் கையளிக்கப்பட்டது. வலி.வடக்கு வள நிலையம் எனும் பொது அமைப்பினூடாக வலி. வடக்கின் மயிலிட்டி, பலாலி, தையிட்டி உள்ளடங்கலான பகுதிகளில் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது. நீண்ட காலமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் செய்வதற்கும்…

வடக்கு , கிழக்கில் 23ஆம் திகதி வரையில் மழை தொடரும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமான மழை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,  இம் மழையின் போது இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். அண்மித்த ஆண்டுகளில் மே…

அரை அவியல்களால் அவமானமாம்!

வடக்குக் கிழக்கிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி பிரபலங்கள் தான் பின்னடைவைக் கொண்டு வந்திருந்ததாக கட்சி தலைமை கொழும்பில் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஆகியோரது செயற்பாடுகளை கட்சி தலைமை கண்டித்துள்ளது. அதிலும் சந்திரசேகரின் சொற்களும் உடல்மொழியும் நையாண்டித்தனமான பரிகசிப்பும் ஆதரவாளர்களைக் கூட தலைகுனிய வைத்துள்ளதாக புகார் இடப்பட்டுள்ளது.…