Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் , மயிலிட்டி பகுதியில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மயிலிட்டி பகுதியில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியில்…
வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தி வரக் கூடாது என்பதற்காகவே நான் போட்டியிட்டேன். அதனை செய்தும் காட்டினேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், என்னைப் பார்த்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நீங்கள் …
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு மாநகர சபையில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட பகுதிகளில் புதிதாக வியாபார நிலையங்கள் திறக்கப்படும் போது , அனுமதிகள் பெறப்பட வேண்டும். ஆனால் அனுமதிகள் பெறாமல் திறக்கப்பட்டால் அவற்றை உடனடியாக மூட முடியாதது. அவர்கள் அனுமதி பெறுவதற்கான கால…
நல்லூர் சூழலில் அமைந்துள்ள அசைவ உணவகம் அகற்ற கோரி போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக ஆரம்பித்த பேரணி யாழ் மாநகர சபை முன்பாக நிறைவடைந்தது. இதன்போது யாழ் மாநகர…
நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே தான் போட்டியிடவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். ஆகவே, இப்போது அதைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை. அதையே திரும்பத் திரும்பப் பேசி குழப்ப வேண்டாம் என பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வி…
உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற தமிழரசுக்கட்சியை சார்ந்த ஒருசில ஆதாரவாளர்கள் மதுபானம் வழங்கினார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தலைமைப்பீடம் அதனை செய்யுமாறு கோரியிருக்காது. எங்களுக்கு அது நன்கு தெரியும்.நான் கூறிய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக எனது மனவருத்தத்தை தெரிவிக்க கடமைபட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார் சிவாஜிலிங்கம். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் வல்வெட்டித்துறை…
யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் நாளை புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மயிலிட்டி பகுதியில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் கடந்த காலங்களில்,…
வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரேரணையொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை அரசு கையகப்படுத்துதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 28.03.2025 திகதி இடப்பட்ட,…
யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்த போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது. இதையடுத்து பொலிஸார்…
யாழில். தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுளளார். உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றினை பராமரிக்கும் முகமாக முதியவர் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். அந்நிலையில் , கடந்த சில தினங்களாக குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாததால் , குடும்பத்தினர் அவரை தேடி சென்ற…