Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மதுரி Saturday, May 24, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப காவல்துறைப் பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயது மதிக்கத்தக்க…
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற தேசிய மக்கள் சக்தியினர் தயாரித்து வெளியிட்ட பாடல்கள் தலையிடியாக மாறத்தொடங்கியுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையை கைபற்றி ஆட்சியமைத்த பின்னர் தலைவர் பிரபாகரனுக்கு சிலை வைக்கப்போவதாக தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்திருந்தனர் இந்நிலையில் தற்போது குத்துக்கரணமடித்துள்ளதுடன் சிலை அமைப்பது தொடர்பில் தான் ஒருபோதும் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சிறப்புரை இடம்பெற்றது. “சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் முழுமையான வறுமை ஒழிப்பு: இலங்கைக்கான பாடங்கள்” எனும் தலைப்பில் குறித்த உரை நிகழ்த்தப்பட்டது.…
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அடியவர்கள் அன்பளிப்பாக கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய்களை திருடியது யார் ? என கேட்டு , ஆலய பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் இடம்பெற்றது. அதன் போது, ஆலயத்தின் தற்போதைய நிர்வாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு…
வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில், தனிப்பட்ட தேவைக்காக வெளியில் சென்ற சமயம், கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சீமெந்தினால் ஆனா…
யாழ்ப்பாணத்தில், கழிவுகளை வீதிளில் கொட்டுவதை குறைப்பதற்கான இனம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கமரா (CCTV) பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதன் போதே கண்காணிப்பு…
இலங்கை காணி அமைச்சினால்; வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பேச்சு நடாத்த அனுர அரசு முற்பேட்டுள்ளநிலையில் வர்த்தமானியை விலக்க கோரவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மார்ச் 28, வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வடக்கு கடலோரப் பகுதியில் சுமார் 6,000 ஏக்கர் காணியின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அந்த காணி அரசால் கையகப்படுத்தப்படும்…
தமிழக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த வடக்கு கடல்தொழிலாளர் இணையத்தினர் யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கற் யாழ்.தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரியும், அத்துமீறல்களால்…
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை காவல்துறையில் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக…
யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , யுவதியை கடத்தி சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தில் , யுவதியின் கணவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் , தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கடத்தி செல்லப்பட்ட யுவதியை மீட்க…