Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் தனது கணவரை கனடா அனுப்பி வைக்குமாறு கூறி 27 லட்சத்து 80 ஆயிரம்…
வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார் வல்வெட்டித்துறையில் உள்ள வங்கி ஒன்றுக்கு முன்னால் அவர் மயங்கிய நிலை காணப்பட்டதையடுத்து முச்சக்கர வண்டி சாரதி…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில்…
அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும்…
வடக்கில் சில பாடசாலைகளில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடை விதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவ பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போதே அவ்வாறு முறையிட்டுள்ளனர். குறித்த சந்திப்பில், …
ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை புண்ணிய பிரதேசமாக வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ச் சைவ பேரவையினர் வடமாகாண ஆளுனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை…
யாழ். பல்கலை பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டி நடைபவனி யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பட்டப்பின்படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் தி.…
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறையில் நடைபெற்ற கலந்துரையாடலில்…
காணி அபகரிப்பு நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்தமையால் நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், வடக்கில் வவுனியா தவிரந்த நான்கு மாவட்டங்களில் 5,940 ஏக்கர் காணியை…
நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும்நல்லை சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் யாழ்ப்பாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் அகில…