Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவரைக் கண்டித்தும் பாரிய கண்டன பேரணியினை எதிர்வரும் 30ம் திகதி நடாத்த உள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்தார்.…
செம்மணி மனித புதைகுழியில் அதிர்ச்சி தரும் வகையில் சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இதில் 140 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக இரண்டாம் கட்ட அகழ்வின் 32வது நாளான…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை,ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை எலும்புக்கூட்டு தொகுதியொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடனும் எலும்புக்கூடு தொகுதியொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்…
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் , படகொன்றில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களையும் , கைது…
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதற்கும் உண்மை, நீதி, இழப்பீடுகள் உட்பட காணாமல் போனோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் தீர்மானம், இலங்கையில்…
செம்மணியில் கட்டம் கட்டமாக 40 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 130 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 141 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே செம்மணி மனிதப் புதைகுழிக்கு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என…
சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்க தான் தயார் என சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருந்தால் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு இடம் பெறுவதை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் மனித புதைகுழியில் இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகளாக…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் செவ்வாயக்கிழமை , புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 65 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக…
படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகள் பழுதடைந்தமையால் , திசை மாரி நெடுந்தீவு கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் நால்வரையும் , எதிர்வரும்18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் பயணித்த படகில் இந்திய…
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் குறித்த சான்று பொருட்கள் நீதிமன்ற காவலுடன் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்…