Category யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக மகேசன் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் யாழ். மாவட்ட செயலருமான கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த மார்ச் மாதம் முதல் செயற்படும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களில் கலாநிதி ஏ.எம்.பி.என். அபேசிங்கவின் பதவி வறிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது…

தமிழரசு கட்சியும் எமது கூட்டுக்குள் வர வேண்டும்

தமிழரசு கட்சி ஈபிடிபியுடன் பேச்சுவார்த்தை நடாத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டதை மூடி மறைப்பதற்காகவே எமது தரப்பில் ஒரு சிலர் ஈபிடிபியுடன் பேசவுள்ளதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டதாக   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,…

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில்இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின்…

செம்மணியில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள் , சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு , அவை சட்ட…

மக்கள் நலன்சார்ந்து பார்க்கலாம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து  பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே டக்ளஸ்  இதனைத் தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ்…

செம்மணி :தாமதம் வேண்டாம்!

யாழ் – செம்மணி மனிதப் புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேச கண்காணிப்புடன் அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டும் .அத்துடன்  நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி அகழ்வுப் பணியை இடைநிறுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தி இன்றையதினம் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில்…

பிச்சை பாத்திரம் ஏந்தியே வந்தனே தோழரே?

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஈ.பி.டி.பி கட்சியிடம் ஆதரவு கோரியிருக்கின்றோம். கட்சியுடன் பேசி முடிவைச் சொல்வதாக கட்சியில் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியின் ஆதரவு கிடைத்தால் அனேகமான சபைகளில் தமிழரசுக்கட்சி நிர்வாகம் அமைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கட்சியின்  பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழரசு மற்றும் தமிழ் தேசியப்பேரவையென இரண்டு…

உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது நினைவுதினம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய…

வடக்கு மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு

வடக்கு பாடசாலை மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் தெரிவித்துள்ளார்.  உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு…

வடக்கில் போதை பாவனைக்கு சிறுமிகளும் அடிமை

வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு சிறுமிகளும் அடிமையாகியுள்ளதாக வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  நீதிமன்றினால் 15…