Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
” எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் ” என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நாளைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஊடகங்களை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் , தெல்லிப்பளை வைத்தியசாலை போர் மற்றும் இடப்பெயர்வுகளின்…
யாழில் வெடிமருந்துகள் மீட்பு! ஆதீரா Thursday, June 12, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்தவர்கள் வெடிமருந்துகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெடிமருந்துகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம்…
இலங்கையில், வடமாகாணத்திலையே வீட்டு திட்டத்திற்காக அதிக தொகையாக 18 இலட்ச ரூபாய் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாண அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும்…
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் (PSDG) முன்னெடுக்கப்படும் தலா 18 லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதல்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநரிடம்,…
பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்ட நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறும், அதனை உடனே ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார் பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் போது,…
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு…
உள்ளுராட்சி சபைகளில் கூடிய வாக்குகளை பெற்றுக்கொண்ட தரப்புக்களே ஆட்சி அமைக்கவேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் அணி வலியுறுத்திவருகின்றது. எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக தமிழ் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து அணியாக சபைகளை கைப்பற்ற முற்பட்டதையடுத்து தமிழரசுக்கட்சி ஈபிடிபி ஆதரவை நாடியுள்ளயுது. இந்நிலையில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்ந்து செயலாளர் செல்வராசா கஜேந்திரனும்…
வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளது ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் கட்சிகள் போட்டிபோட்டவாறாக உள்ளடி வேலைகளை முன்னெடுத்துவருகின்றன. இந்நிலையில் பெரும்பான்மை மூலம் ஆட்சியை கைப்பற்றிய பூநகரி பிரதேசசபையின் முதலாவது அமர்வு அமைதியான முறையில் இன்று நடந்தேறியுள்ளது.தமிழரசுக்கட்சியின் சிவஞானம் சிறீதரனது ஆதரவு தரப்பினை சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் சகிதம் பூநகரி மற்றும் கரைச்சி பிரதேசசபைகள் போட்டிகள் ஏதுமின்றி ஆட்சியை தக்கவைத்துள்ளன.…
விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து! தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு…
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள்…