Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஐநா மனிதவுரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்க யாழில் போராட்டம் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவலகத்திற்கு வருகை தந்த ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக அலுவலகத்திற்கு…
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை வந்திறங்கிய ஆணையாளர் , முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும்…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இவ் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலய வீதியில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இன அழிப்பு, செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தலைமையிலான குழுவினரையும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில்…
செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தனது மூன்று பிள்ளைகளும் அடுத்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் , மூன்று பிள்ளைகளையும் கடந்த 16 வருட காலமாக தேடி வருவதாக தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயார் ஒருவரே அவ்வாறு தெரிவித்தார் கிளிநொச்சி கண்டாவளை பகுதியை சேர்ந்த வைரமுத்து நிரஞ்சனாதேவி என்பவரின் மகன்களான ,…
யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19…
யாழ் பல்கலைக்கழத்தில் தமிழின அழிப்பின் பதாதைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் விதமாக பல்கலைக்கழக முன்றலில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வடமாகாண சபை அவைத்தலைவரும் , தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீவிகே சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர்…
பொலிசாரின் எச்சரிக்கையை மீறி சென்ற டிப்பர் வாகனத்திற்கு பொலிஸார் ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்துள்ளனர். பளை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை சாவகச்சேரி பொலிஸார் கனகம்புளியடி சந்தி பகுதியில் வழி மறுத்துள்ளனர். அதன் போது டிப்பர் வாகனத்தினை நிறுத்தாது , அதன் சாரதி டிப்பர் வாகனத்துடன் தப்பியோடியுள்ளார். அதனை…