Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான J/435 கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள்…
செம்மணியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் பணிகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் முன்னெடுக்கப்பட்டது.…
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. இதுதொடர்பில் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டார நேற்று சனிக்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கையில் அரச செலவினங்களை குறைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது முறையற்ற வகையில்…
செம்மணியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் பத்தாம் நாள் பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும்…
சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார். மேலும்…
நைஜீரியாவில் இருந்து யாழ் வந்த இளைஞனுக்கு மலேரியா யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவருக்கு மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த 30ஆம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது. தெல்லிப்பழையைச் சேர்ந்த குறித்த…
யாழில் காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜன் கன்ஸ்ரன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு, காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் தாயார் பனடோல் சிறப் கொடுத்துள்ளார். அந்நிலையில் குழந்தை மயக்கமடைந்துள்ளது. அதனை அடுத்து குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை…
செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும்…
செம்மணியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஒன்பதாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும்…
யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்டு யாழ்ப்பாணத்தில் சுமார் 83 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில்…