Category யாழ்ப்பாணம்

சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிட்டு பூங்காவில் அஞ்சலி

முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை மீட்பதற்காக நாளைய தினம் வியாழக்கிழமை கிட்டு பூங்காவில் ஆரம்பமாகும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்துள்ளார்.  யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். …

செம்மணியில் இன்றும் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை  05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.. கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில்,  20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக…

யாழ். பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

யாழ். பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கறுப்பு யூலை படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது.

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு யூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்…

இளம் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த பின் தன் உயிரை மாய்த்த இளைஞன்

அம்பாறையில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை  செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.   மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்திய  பின்னர் , இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.…

வடக்கில் வீதி மின் விளக்குகளை பழுது பார்க்க 38 பேருக்கு பயற்சி

வடக்கு , உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி மின் விளக்குகளை பழுது பார்த்தல் மற்றும் புதிதாக பொருத்துதல் தொடர்பில் முதல் கட்டமாக 38 பேருக்கு பயற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தெரிவித்துள்ளார்.  உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

யாழில். இந்திய துணை தூதரக வாகனம் விபத்து

யாழ்ப்பாண அண்மித்த பகுதியில் இந்திய துணைத்தூதரகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. வாகனம் விபத்துக்குள்ளான வேளை வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  யாழ் . நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த இந்திய துணை தூதரகத்திற்கு சொந்தமான வாகனத்துடன் , நல்லூர் – ஓட்டுமட…

செம்மணியில் பால் போச்சியும்?

செம்மணி மனிதப்  புதைகுழி அகழ்வு பணிகள் 17ஆவது நாளாக தொடரும் நிலையில் ஆறு மாதங்களேயான வயதுடைய குழந்தையினது உடல என்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இன்று அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் அவதானிப்பின் அடிப்படையில் கைக்குழந்தைகள் உட்பட அனைத்தும் சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளேயென மருத்துவ அதிகாரி தகவல்…

விடுதலை விருட்சத்திற்கு நீரினை வழங்குங்கள் – குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை வலியுறுத்தும் வகையிலான அணி திரள் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை, மறுநாள் வெள்ளிக்கிழமை ஆகிய…

செம்மணி புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி ? இன்றும் 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு பால் போச்சியை ஒத்த போத்தல் ஒன்றும் (குழந்தைகள் பால் அருந்தும் போத்தல்) ஆடைகளை ஒத்த துணிகள்…