Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்கள் அங்கு அழைத்துவரப்பட்டு புதைகுழிகள் முன்பதாக கொல்லபட்டு புதைக்கப்பட்டிருப்பதான சந்தேகங்கள் வலுத்துவருகின்றது. இன்றைய தினம் வியாழக்கிழமை செம்மணி மனித புதைகுழியில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறிய பால் போத்தலும் சிறிய இரும்பு உருண்டைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டு வiகைப்படுத்தப்பட்டு நீதிமன்றினால்…
இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலைக்கான “விடுதலை” எனும் தொனிப் பொருளிலான கவனயீர்ப்பின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பு வாசலில் இருந்து தொடங்கிய நடைபயனம் கிட்டுப் பூங்காவினை அடைந்து.…
நிலத்தடி நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான கண்காட்சிக் கூடம் இம்முறை நல்லூர் பெருந்திருவிழாவின் போது மக்கள் பார்வைக்காக உருவாக்கப்படவுள்ளது. நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில், அரசடி வீதியில் அமைந்துள்ள “நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில்” எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 24 வரை இக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 09 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 04 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 23 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில்…
தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது. என யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு…
நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக மீளச்செலுத்த தேவையற்ற 65மில்லியன் அமெரிக்கன் டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையிலும், துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுவதற்கான காரணம் என்ன என்றும் சபையில் கேள்வியெழுப்பினார்.…
யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன் (வயது 51) என்பவரே படுகாயமடைந்த நிலையில் ,…
தமிழீழ விடுதலை இயக்க தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சியின் தற்போதைய தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.…
செம்மணி மனித புதைகுழியில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.அவற்றில் 67 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளநிலையில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாமென…
அனுர அரசு கறுப்பு ஜீலையினை முன்னிட்டு கொழும்பிலிருந்து நல்லிணக்க புகையிரத சேவையொன்றை இன்று முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவத்திற்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 1983 கறுப்பு ஜூலை…