Category யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழி பகுதிகளை ஸ்கான் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக காத்திருப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.  செம்மணிப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேலதிகமாக, செய்மதிப் படங்களை அடிப்படையாக வைத்து துறைசார் நிபுணர் சோமதேவா அடையாளப்படுத்திய இடத்திலும் என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.  இதையடுத்து, செம்மணியில்…

நல்லூர் மகோற்சவம் ஆரம்பம் – பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிப்பு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மஹோற்சவ திருவிழா  தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. மகோற்சவ திருவிழாக்களில் மஞ்ச திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 07ஆம் திகதியும் , மாம்பழ திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட்19ஆம் திகதியும் , சப்பரத் திருவிழா எதிர்வரும் 20ஆம்…

அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு

வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டுகிறது என பருத்தித்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர்.  பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது.  இதனால் நாளாந்தம் எமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இலட்சம்…

ரிக்ரொக் பிரபலம் மோட்டார் சைக்கிள் வாங்க நகைகளை களவெடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக…

புதைகுழியினுள் புதிய புதையல்!

புதைகுழியினுள் புதிய புதையல்! செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு பகுதியில்  அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது பொலித்தீன் பை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனுள் எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றன. அந்தப் பொலித்தீன் பை முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே அது பற்றிய…

செம்மணியில் கடந்த 32 நாட்களில் 96 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு – 54 சான்று பொருட்களும் மீட்பு 

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் ஒரு எலும்புக்கூடு முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு…

புதைகுழிகள் தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும் – சுமந்திரன் வலிறுத்தல்

உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை இன்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ, சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர்…

யாழில். கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு

கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு “நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி…

நல்லூரான் கொடியேற்றம் நாளை – இன்று கொடிச்சீலை கையளிக்கப்பட்டது

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு…

யாழில். பாடசாலை மாணவியை காணவில்லை

பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  யாழ்ப்பாணம் செல்லர் வீதியில் வசிக்கும் மாணவியான 17 வயதுடைய தனது மக்களை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என தாயார்  தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கையில்,  தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல் வேளை வழமை…