Category யாழ்ப்பாணம்

யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்

யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.  குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,  மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில், தனது குடும்ப வறுமை…

காலம் வரும் போது பேசலாம்!

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது. தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்…

வித்தியா:கொலையாளியை விடுத்தவருக்கு சிறை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (20) தீர்ப்பை வழங்கியுள்ளது.  அதற்கு மேலதிகமாக, லலித் ஜயசிங்கவுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில்,…

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06  மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.  ” தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ..” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில்…

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில். 27ஆம் திகதி போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க  நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்  மேலும் தெரிவிக்கையில்,  இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்க்கில் குறிப்பாக எமது…

உரிய நேரம் வரும் போது புதிய அரசியலமைப்பு பற்றி பேசுவோம் – தமிழரசு முன்னணிக்கு பதில்

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது. தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்…

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் கொத்து தயாரித்தவருக்கு 40 ஆயிரம் தண்டம் – மற்றுமொரு உணவகத்திற்கு

யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து றொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  ஆனைக்கோட்டை பகுதியில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த  உணவக உரிமையாளருக்கும் , மற்றுமொரு உணவகத்தில்…

ஒரே நாளில் மன்னார்-நெடுந்தீவில் கைதுகள்!

இலங்கையின் வடபுலத்தில் இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வகையில் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது…

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான பகுதியை ஸ்கானர் இயந்திர உதவியுடன் முழுமையாக பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன  அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் குறித்த…

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி! யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும்…