Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நோய்களை குணப்படுத்துவதென்ற பேரில் இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மற்றும் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஈழம் சிவசேனை அமைப்பின் புகாரையடுத்து குழுவினரை குடிவரவு குடியகல்வுத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். நேற்று முன்தினம் இரண்டு மதபோதகர்கள் காவல்துறையால்; கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர்…
தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள நிலையில் கிளிநொச்சியில் சி.சிறீதரன் தனது ஆதரவாளர்களை சுயேட்சையாக களமிறக்க…
குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன் , பொலிஸ்நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை…
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன்…
யாழில். மயங்கி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெல்லியடி மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியரான வடமராட்சி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தணிகைவேல் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். வதிரியில் உள்ள தனது வீட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்த நிலையில் , அவரை வீட்டார் பருத்தித்துறை…
யாழில். ஹெரோயினுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில் ஆதீரா Monday, March 10, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டை பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயது இளைஞன் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர்…
நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். குறித்த குழுவினரை குடிவரவு குடியகல்வுத்துறை புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டனர் இதையடுத்து நேற்று முன்தினம் இரண்டு மதபோதகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக…
குப்பையை கண்டுபிடிக்க கமெரா! யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் குப்பை போடுவோரை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைக்கு ஏதுவாக நகரம் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ் மாநகர சபை மேற்கொண்டு வருகிறது. யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் குப்பை போடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இனம்…
கைது செய்யப்பட்ட யூரியூப்பர் கிருஸ்ணா மீது நாளை மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அநேகமாக பிணை நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளது. அல்லது 3 மாதங்கள் வரை சிறையிலடைக்க வாய்ப்புள்ளது. ஜபிசி பாஸ்கரனால் ஆரம்பிக்கப்பட்டு கல்லா கட்டப்பட்ட உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி…
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்றன…