Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவாந்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த மதுசன் குணசிங்கம் (வயது 28) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை…
புதுக்குடியிருப்பு, அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுவாகல்…
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…
மாவீரர்களுடைய உறவுகளும், தமிழ் மக்களும் மாவீரர்களை விதைத்த இடத்தில் கண்ணீர் சிந்தி நினைவுகூருவதற்காக, வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மாவீரர்துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்…
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் நேற்று செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைதானவர்கள் மன்னாகண்டல், 10 ஆம் வட்டாரம், தேவிபுரம், சுதந்திரபுரம் , உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் ஆகிய பிரதேசங்களை…
வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களதுகுடுபங்களிற்கு நீதி கோரி மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த நாள் முதல் தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தாம் 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் இந்த…
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது அந்த வகையில் கடந்த 27 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு…
காங்கேசன்துறை தையிட்டி விகாரையில் பாரிய மனித புதைகுழியினை மறைக்கவே விகாரை அமைக்கப்பட்டுள்ள்தாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைதீவிலும் அத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். “கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது…
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் உந்துருளியில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு முன்பாக…
முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் உள்ள நீர் நிலையிலிருந்து சிறுவன் ஒருவன் இன்று புதன்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்த சிறுவன் நேற்று செவ்வாய்க்கிழமை (25) காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார். தேடுதல் நடவடிக்கையின் போது நீர் நிலை…