Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட தமிழ் மக்களது நகைகளை மீள தமிழ் மக்களிடமே கையளிக்கவேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைக்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 இல் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி காலக்கட்டத்தில் விடுதலைப்…
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை தவறி விழுந்தவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை கூரையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு…
கடற்றொழில் அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்ட மீனவ சங்க தலைவரை நேரடியாக சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அடாவடித்தனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் கடந்த 24ஆம் திகதி தமது கட்சிசார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீவு – கேப்பாப்புலவுப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கேப்பாப்புலவு…
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஸ்டானங்களை நடத்தும் வடகிழக்கிலுள்ள தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை இராணுவத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி வழிபாடுகளும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மத வழிபாடுகளும் தேவாலயங்களில் நடைபெறவுள்ளன. அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு காவல்துறை பாதுகாப்பை செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதிக…
ஆர்ஜென்டீனா சிலி போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சிக்காலத்தில் பலர் கொல்லப்பட்டனர்.ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் மனித புதைகுழிகளைதோண்டும் விடயத்தில் மிகவும் நம்பகதன்மை மிக்க விதத்தில் செயற்பட்டனர்.பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தனர்.மனித புதைகுழிகள் அகழப்படும்போது பொதுமக்கள் பார்க்ககூடிய நிலை கூட காணப்பட்டது. ஆனால் எங்கள் நாட்டில் மனித புதைகுழிகளை தோண்டும்போது மக்களை ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லையென அம்பலப்படுத்தியுள்ளார் சிரேஸ்ட…
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று வெள்ளிக்கிழமை (11) கேப்பாபிலவு கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றை கையளித்திருந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமும், மற்றும் உயர் அதிகாரிகளிடமும் கடந்த வருடம்…
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு பின்பாகவுள்ள காட்டு பகுதியில் மரக் குற்றிகள் கடத்தல் முயற்சி புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. உடையார்கட்டு காட்டுப்பகுதியில் புதன்கிழமை (09) இரவு மரத்தடிகள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹெரத்திற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, 1700 ற்கு மேற்பட்ட காயா…
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவற்குட்பட்ட சின்னசாளம்பன் பகுதியில், பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபர், ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை…
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 25 மாவட்டங்களிலும் 336 உள்ளுராட்சிமன்றங்களுக்காக சுமார் 2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. அவற்றில் 2260 குழுக்கள் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் 2900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு கள்ளப்பாடுபகுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், …