Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி…
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமை மிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள…
இலங்கை கடற்படையினர் கடந்த ஏப்ரல் 21 முதல் 28ஆம் திகதி வரை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடைக்காடு, புதுமாத்தளன், திருகோணமலை, கொக்கிளாய், சேப்பல் தீவு ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே…
வடமாகாணத்தில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கரைச்சி ,பூநகரி மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபைகளே தனித்து பெரும்பான்மையுடன் தமிழரசுக்கட்சி ஆட்சியமைக்கும் சபைகளாக தெரிவாகியுள்ளன. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெயர்களை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களில்…
முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. Related Posts முல்லைத்தீவு Post a Comment No comments உலகம் ஐரோப்பா அதிகம் வாசிக்கப்பட்டவை இலங்கையில் உள்ளூராட்சி மன்றத்…
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் பூநகரி பிரதேசசபைகளும் முல்லைதீவின் கரைதுறைப்பற்று பிரதேசசபையும் மட்டுமே போதிய பெரும்பான்மையின் கீழ் ஆட்சியை அமைக்க தயாராகின்றன.ஏனைய சபைகளில் இழுபறி தொடர்கின்றது.இதனிடையே புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளாட்சி நிறுவனங்களில் பெரும்பான்மையாக வெற்றி…
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிர்ச்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது கல்கமுவ சந்தபோதி தேரரின் முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு பொலிசார் மூவரை நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸ் நிலையம்…
வடக்கில் ஒவ்வொரு மாவட்டச்செயலகங்களிலும் பிரத்தியேகமாக சுற்றுலா அலகுகளை நிறுவ நடவடிக்கை எடுப்பதுடன் அதற்குரிய ஆளணிவளங்களையும் வழங்கி வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரைந்து மேம்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். தற்போது சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருமானத்திலேயும் இலங்கை முழுவதும் தங்கியுள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டுக்கு வருகைதருகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட…
முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார். …
முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு முல்லைத்தீவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, கள்ளியடி வயல்வெளி பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அருமைநாயகம் யசோதரன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.