Category முல்லைத்தீவு

இனவழிப்பிற்கு நீதி கோரி வடகிழக்கில் போராட்டம்!

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி  கந்தசாமி கோயில், மன்னார்…

தாயும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்  பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த  தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் கிணற்றிலிருந்து சடலமாக வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர்  உசாகரன் மாலினி( வயது 38) தாய் மற்றும் உசாகரன்…

வட்டுவாகல் பாலம் மூடப்படுகின்றது!

வட்டுவாகல் பாலம் மூடப்படுகின்றது! தூயவன் Tuesday, July 15, 2025 முல்லைத்தீவு முல்லைதீவு நகரை இணைக்கும் வட்டுவாகல் பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை…

ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து தீர்வு

நீண்டகாலமாக போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுவந்த முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று (14) நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலை கிராமம் தொடக்கம் கிளிநொச்சி வரையான வழித்தட அனுமதிப் பத்திரமுள்ள தனியார் பேருந்து நீண்டகாலமாக ஒதியமலை கிராமத்துக்கு சேவையினை வழங்கவில்லை. குறிப்பாக, கிளிநொச்சியிலிருந்து ஒட்டுசுட்டான் வரையிலேயே இந்தப்…

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் – 31 பெண்கள், 21 ஆண்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால் உயிரிழந்துள்ளமையும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளமையும் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது.  குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது…

இராஜபச்சாக்கள் மீது அநுரா அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…

புதுக்குடியிருப்பில் புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியில் அகழ்வு

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்று வருகின்றது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போருக்கு  முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி,…

சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை!

 யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435  கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில்  இன்று(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான J/435…

குளங்களை அபகரிக்கும் வனவளத்திணைக்களம்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப்பிரிவிலுள்ள ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளம் என்பவற்றை இராணுவம் விடுவிக்கும் நிலையில் அவற்றை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.  ஓட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டார் . மேலும் தெரிவிக்கையில்,  குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில்,…

செம்மணி வருவார் ஜநா ஆணையாளர்?

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜநா ஆணையாளர் நேரில் வருகை தர பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் இன்று காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது.  தொடர்ந்து மலர்வணக்கம்…