Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இரட்டை நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு காய்ச்சல் இல்லை என்றும் மேலும் அவரது இரத்த பகுப்பாய்வுகள் சீராக உள்ளன. அவரது இதயத்துடிப்புகள் நிலையாக உள்ளன என்று என்று செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார். போப் பிரான்சிஸின் ஒட்டுமொத்த உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும்,…
நேற்று வியாழக்கிழமை காசாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்ட நான்கு உடல்களில் ஒன்று, ஹமாஸ் கூறியது போல், பணயக்கைதி ஷிரி பிபாஸின் உடல் அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களான ஏரியல் மற்றும் கிஃபிர் (அவர்கள் இப்போது ஐந்து மற்றும் இரண்டு வயதுடையவர்கள்) இறந்துவிட்டார்கள் என்ற செய்தி…
இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்ததாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்தனர். அதிகாரிகள் இந்த சம்பவத்தை “சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதல்” என்று குறிப்பிட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது. பேட்…
நேற்று புதன்கிழமை பிரித்தானிய நேரப்படி அதிகாலை 03:30 மணியளவில், வடக்கு ஐரோப்பா முழுவதும் வானம் தீப்பிழம்புகளுடன் காற்றில் பெருகிச் செல்லும் ஒரு பொருளால் ஒளிர்ந்தது. ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததால் ஏற்பட்டவை. டென்மார்க், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்தில் இவற்றைப் பார்த்ததாக தகவல்கள் உள்ளன. பின்னர் ராக்கெட்டின் துண்டுகள் போலந்தில்…
ஹமாஸ் போராளிகள் நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்களில் ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இளம் குழந்தைகள், கிஃபிர் மற்றும் ஏரியல் ஆகியோர் அடங்குவர். தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு வெளியே உள்ள ஒப்படைப்பு இடத்தில், ஹமாஸ் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த முகமூடி அணிந்த மற்றும் ஆயுதமேந்திய போராளிகளின் கணிசமான…
கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம்! கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று வியாழக்கிழமை (20) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏ9 வீதி வழியாக டிப்போ சந்தி…
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி! யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும்…
உக்ரைன் தொடர்பான அமெரிக்க ரஷ்யா பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று டொனால்ட் டிரம்ப் அழைத்தார். இது பதட்டங்களை அதிகரித்தது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று டிரம்ப் முத்திரை குத்தியதைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான விமர்சனப் பரிமாற்றம் புதன்கிழமை மேலும் அதிகரித்தது. நான்…
தென்கு லண்டன் சர்ரே கவுண்டி குடியிருப்புப் பகுதி அமைந்த வீதியில் திடீதரென பெரிய குழி தோன்றியது. கடந்த திங்கள்கிழமை இரவு காட்ஸ்டோன் ஹை ஸ்ட்ரீட்டில் முதன்முதலில் துளை தோன்றியது, செவ்வாய்க்கிழமை மதிய உணவு நேரத்தில் குறைந்தது 65 அடி (20 மீ) நீளமாக உருவாகியுள்ளது. குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிக்கு அடியில்…
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரான அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக கேட்டறிந்ததோடு, வடக்கின் பொருளாதார நிலை மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார். இதுகுறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ்தளத்தில்…