Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஒரு பிரபலமான அழகிய பஹல்காம் நகரைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை நான்கு துப்பாக்கிதாரிகள் பல சுற்றுலாப் பயணிகள் மீது அருகில் இருந்து…
உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் அடுத்த போப்பாண்டவராகவும், தலைவராகவும் போப் பிரான்சிஸுக்குப் பின்னர் யார் வருவார்கள் என்பது குறித்த ஊகங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இருப்பினும் கார்டினல்களின் மாநாடுதான் இறுதி முடிவை எடுக்கும். போப்பாண்டவர் தெரிவில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆரம்பகால வலுவான போட்டியாளர்கள் வருகிறார்கள். வத்திக்கான் நகரத்தின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும்…
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் இறந்த பின்னர் அவரின் இடத்திற்கு புதிய போப்பாண்டவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். போப்பின் அக்க ஏற்பாடுகளை வத்திக்கான் செய்யும். இதற்கான விரிவான வழிமுறைகளை ஏற்கனவே போப் பிரான்சிஸ் அவர்கள் தனது வாழ்நாளில் வழங்கியிருக்கிறார். காலம் சென்ற முன்னால் போப் பாண்டவர்களின் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது போன்று செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில்,…
கத்தோலிக்க மக்களின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் தனது 88வது வயதில் இன்று காலை 7.35 மணியளவில் காலமானார். நேற்று ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை மக்கள் முன்னிலையில் தோன்றி தனது வாழ்த்துக்களைக் கூறி ஆசீர்வாதத்தையும் வழங்கியிருந்தார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்தார். சமீபத்திய ஆண்டுகளில் போப்பாண்டவர் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார்,…
வெற்றி பெறுவதற்குச் சாதகமாக தேர்தலுக்கு முன்னர் கூட்டுச் சேர்ந்து சகல சபைகளையும் இலகுவாக கைப்பற்றுவதைத் தவிர்த்து, தோல்வி அடைந்த பின்னர் கூட்டுச் சேரலாமென அந்தத் தோல்விக்காக காத்திருப்பதென்பது அறப்படித்த பல்லியின் கதையை நினைவுபடுத்துகிறது. தமிழரசு கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கும் சுமந்திரனும் சிறீதரனும் எப்போது ஒன்றாக இத்தேர்தல் மேடையில் நின்று வாக்கு கேட்கப் போகிறார்கள்? இன்னும்…
அமெரிக்கா முழுவதும் னாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான கொள்கைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு போராடினர். நேற்று சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் டிரம்பின் ஆக்ரோஷமான குடியேற்றக் கொள்கைகள், பட்ஜெட் வெட்டுக்கள், பல்கலைக்கழகங்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் மீது அழுத்தம் கொடுப்பது மற்றும் உக்ரைன் மற்றும் காசாவில் மோதல்களை அவர்…
யேர்மனியின் பிராங்போட்டிலிருந்து வடக்கே 35 கிலோ மீற்றர் உள்ள பேட் நௌஹெய்ம் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலாளியான சந்தேக நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் குடியிருப்பாளர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று ஒரு காவல்துறைச் செய்தித் தொடர்பாளர் கூறினார். குற்றத்தின் பின்னணி…
வடமேற்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள காங்கோ ஆற்றில் மோட்டார் பொருத்தப்பட்ட மரப் படகு தீப்பிடித்து கவிழ்ந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இருப்பினும் படகில் சுமார் 500 பயணிகள் இருந்ததால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம்…
துனிசியாவில் உள்ள ஒரு நீதிமன்றம், மாநில பாதுகாப்புக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு 13 முதல் 66 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்ததாக மாநில ஊடகங்கள் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்றும், இந்த விசாரணை ஜனாதிபதி கைஸ் சயீதின் சர்வாதிகார ஆட்சியின் சின்னம்…
நேற்று வெள்ளிக்கிழமை வீசிய புயல் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் கனமழையால் மக்கள் உயிரிழந்துள்ளனர், ஈஸ்டர் விடுமுறைக்காக பயணிகள் பயணங்களை மேற்கொள்வதால் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் பனிப்புயல் காரணமாக இடையூறுகளை எதிர்கொள்கின்றன. இத்தாலி வடக்கு இத்தாலியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…