Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மட்டத்தில் முன்னெடுத்துவருதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்திருக்கும் நிலையில், மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கினால் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு…
அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும்…
கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை, பிரெஞ்சு ரிவியரா ரிசார்ட் கேன்ஸைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் மின் தடை ஏற்பட்டது. அருகிலுள்ள டானெரான் கிராமத்தில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் இரவு முழுவதும் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணிக்குப் பின்னர் மின்வெட்டு தொடங்கியது. அதன் பின்னர்…
ஐரோப்பாவில் மிக உயர்ந்த ஓய்வூதிய வயதை வழங்கும் நாடாக டென்மார்க் நாடு முன்னிலையில் உள்ளது. டென்மார்க்கின் பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இது 2040 ஆம் ஆண்டுக்குள் தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய வயது 67 வயதிலிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டது. பாராளுமன்றத்தில் பரந்த ஆதரவு இருந்தது, மொத்தம் 81 சட்டமன்ற உறுப்பினர்கள்…
கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர். அதன்படி Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளியிட்டுள்ளனர். கனடாவில் குறித்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax…
யேர்மனியின் ஹாம்பர்க் நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாகவும், நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானதாகவும் அவசர சேவைகள் தெரிவித்தன. சம்பவ இடத்தில் 39 வயதுடைய யேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளதாக ஹாம்பர்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.…
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையைக் காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப் பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அவர்களுடனான எங்கள் விவாதங்கள் நடைபெறவில்லை. எனவே, ஜூன் 1, 2025 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நேரடியான 50% வரியை நான் பரிந்துரைக்கிறேன் என்று அவர் தனது சமூக…
உலகின் மிகவும் ஆபத்தான தீம்பொருள்கள் (Malware) சில இந்த வாரம் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையில் சீர்குலைக்கப்பட்டன. இதன் விளைவாக 20 கைது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய குற்ற எதிர்ப்பு அமைப்புகளான யூரோபோல் மற்றும் யூரோஜஸ்ட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தன. கனடா, டென்மார்க், பிரான்ஸ், யேர்மனி, நெதர்லாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த…
நோர்வேயில் நபர் ஒருவர் காலையில் படுகையில் இருந்து எழுந்தவுடன் வீட்டின் தோட்டத்தில் ஒரு பொிய கொள்கலன்களை ஏற்றும் சரங்குக் கப்பல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு 35 மீட்டர் (443 அடி) நீளமுள்ள கப்பல் ஜோஹன் ஹெல்பெர்க்கின் வீட்டின் ஒரு மீட்டர் தூரத்தில் இருந்தது. கப்பல் முழு…
சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது. முன்னதாக இந்த ரோபோக்களுக்கு மனிதர்களைப் போல் நடக்கவும், நடனமாடவும், ஓடவும் அந்நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது. இந்நிலையில், உடல் வலிமை சார்ந்து விளையாடப்படும் குத்துச்சண்டை போட்டிக்கு ரோபோக்களை தயார் செய்வதன் மூலம் அவற்றின்…