Category - முதன்மைச் செய்திகள்

1
சுதந்திர தினம் கரிநாள் – மக்களை திரட்டும் நடவடிக்கையில் யாழ்.பல்கலை மாணவர்கள்
2
தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்
3
15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: பிரான்சில் விவாதம்!
4
பிலிப்பீன்ஸ் படகு மூழ்கியது: பல 18 பேர் பலி! 28 பேரைக் காணவில்லை: 316 உயிருடன் பேர் மீட்பு!
5
சிறீதரனை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க கட்சி தீர்மானம் ?

சுதந்திர தினம் கரிநாள் – மக்களை திரட்டும் நடவடிக்கையில் யாழ்.பல்கலை மாணவர்கள்


சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளனர்.தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாத தீயிலிருந்து தமிழர் தாயகத்தை காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பிற்காகவும் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை தொழில் செய்ய தம்மை அனுமதிக்க வேண்டும் என கடற்தொழிலாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள கடந்த காலத்தில் நீரியல்வளத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் , உழவு இயந்திரம் உள்ளிட்ட தொழில் உபகரணங்களை தாம் பல இலட்ச ரூபாய் செலவில் வாங்கியுள்ளமையால் , தமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை  விடுத்துள்ளனர். அதேவேளை , வடமராட்சி கடற்பகுதியில் , வெளிமாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து தங்கி நின்று, உழவு இயந்திரங்களை பயன்படுத்தி , கரை வலை தொழில் செய்வதனால் , வடமராட்சி கிழக்கு பூர்வீக கடற்தொழிலாளர்கள் பலர் கரைவலை இழுக்கும் தொழில் இழந்துள்ளனர் உழவு இயந்திரங்கள் ஊடாக கரை வலை தொழில் செய்யும் போது , அனுமதிக்கப்பட்ட தூரத்தினை விட அதிக தூரம் சென்று வலைகள் இடப்படுவதால் , அப்பகுதியில் தொழில் செய்யும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன் , இயந்திரம் மூலமான கரை வலை தொழிலால் , கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் , கடற்கரையில் உள்ள தாவரங்கள் கூட அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , இம்முறையே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதற்கு தடை விதித்து  அதனை இறுக்கமாக கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் இந்நிலையிலேயே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதனை நிறுத்த கால அவகாசம் கோரி சில கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: பிரான்சில் விவாதம்!


நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு முன்னதாக, 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகங்களுக்கு விரைவான தடையை மக்ரோன் முன்வைக்கிறார்.தேசிய சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் குறித்த விவாதம் தொடங்கியுள்ள நிலையில், இளம் டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வதில் ஆஸ்திரேலியாவைப் பின்பற்ற பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.இந்த சட்டம் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற நெட்வொர்க்குகளை அணுகுவதைத் தடுக்கும்.செப்டம்பர் மாதம் கல்வியாண்டு தொடங்கும் போது தடையை அமல்படுத்த விரும்புவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.சமூக ஊடகங்களின் ஈர்ப்பிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் தனது முயற்சியை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரட்டிப்பாக்கியுள்ளார், இந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முக்கிய தளங்களில் இருந்து தடை செய்யும் விரைவான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, விரைவான நாடாளுமன்ற நடைமுறையைப் பயன்படுத்துமாறு தனது அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதாக ஜனாதிபதி மக்ரோன் கூறினார்.இந்த சட்டம் திங்கள்கிழமை பிற்பகல் பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் ஆராயப்பட உள்ளது, அதைத் தொடர்ந்து செனட் விரைவில் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குழந்தைகளின் மன ஆரோக்கியம், திரை நேரம் மற்றும் தொழில்நுட்ப தளங்களின் சக்தி பற்றிய வளர்ந்து வரும் சர்வதேச விவாதத்தின் மையத்தில் மக்ரோனை உறுதியாக நிலைநிறுத்துகிறது.பிரிட்டிஷ் அரசாங்கம் இளம் டீனேஜர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்தன. ஐரோப்பா கடுமையான வயது விதிகளை நோக்கிச் செல்லக்கூடும் என்ற கருத்துக்கு இது உத்வேகம் அளித்தது.பிரான்சில், இந்தக் கவலை தெளிவான புள்ளிவிவரங்களால் ஆதரிக்கப்படுகிறது. நாட்டின் சுகாதார கண்காணிப்பு அமைப்பான ஆன்செஸின் கூற்றுப்படி, இரண்டு டீனேஜர்களில் ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வரை ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்.12 முதல் 17 வயதுடையவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இணையத்தை அணுக தினமும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், மேலும் பத்தில் ஆறு பேர் முதன்மையாக சமூக வலைப்பின்னல்களுக்கு அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.டிசம்பரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை , சுயமரியாதை குறைதல், தூக்கக் கலக்கம் மற்றும் சுய-தீங்கு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தற்கொலை தொடர்பான பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கத்திற்கு அதிக வெளிப்பாடு குறித்து எச்சரித்தது.டீனேஜ் தற்கொலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் பங்களிப்பதாகக் கூறி, பல குடும்பங்கள் டிக்டோக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளன.

பிலிப்பீன்ஸ் படகு மூழ்கியது: பல 18 பேர் பலி! 28 பேரைக் காணவில்லை: 316 உயிருடன் பேர் மீட்பு!


பிலிப்பைன்ஸில் 350 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது 18 பேர் இறந்தனர் மற்றும் 28 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:50 மணியளவில் பயணிகள் படகு, சாம்போங்காவிலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோவுக்குப் புறப்பட்டபோது கவிழ்ந்தது.பசிலன் மாகாணத்தில் உள்ள பலுக்-பலுக் தீவு கிராமத்திலிருந்து ஒரு கடல் மைல் (கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர்) தொலைவில், எம்.வி. த்ரிஷா கெர்ஸ்டின் ⁠3 என்ற படகு மூழ்கியதாக கடலோர காவல்படை தளபதி ரோமல் துவா செய்தி நிறுவனமான தி அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) யிடம் தெரிவித்தார்.பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையின் கூற்றுப்படி, படகு 27 பணியாளர்கள் உட்பட 352 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டது.படகில் ஒரு கடலோர காவல்படை பாதுகாப்பு அதிகாரி இருந்தார். மீட்புக் கப்பல்களை அனுப்புமாறு முதலில் எங்களை அழைத்து எச்சரித்தவர் அவர்தான் என்று துவா கூறினார். அந்த பாதுகாப்பு அதிகாரி உயிர் பிழைத்ததாகவும் கூறினார்.இதுவரை, மீட்புக் குழு குறைந்தது 316 பேரைக் காப்பாற்றியுள்ளது. மேலும் இன்னும் காணாமல் போன 28 பேரைத் தேடி வருவதாக கடலோர காவல்படை தளபதி ரோமல் துவா செய்தி நிறுவனமான ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் (AFP) இடம் தெரிவித்தார். 

சிறீதரனை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க கட்சி தீர்மானம் ?


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில், அப்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்தார். அந்தக் கூட்டத்திலேயே தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.அதேபோன்று பாராளுமன்றக் கொறடா பதவியை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கும், பாராளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக இரா. சாணக்கியனையும் நியமிக்கத் தீர்மானித்தோம். பாராளுமன்றக் குழுவின் தலைவராக எஸ். சிறீதரனை நியமித்தோம். ஒரு குழு நியமித்த பதவியை மாற்றுவதற்கான அதிகாரம் அக்குழுவிற்கே உண்டு.அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக இப்பத்வியை வழங்கியது. ஆனால், அவர் அரசியலமைப்புச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அரசியல் குழு இரண்டு தடவைகள் ஆலோசனை வழங்கியிருந்தது. திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்திலும் சுமார் 4 மணித்தியாலங்கள் இது குறித்து வலியுறுத்தியும் அவர் செவிமடுக்கவில்லை.கட்சியின் எந்த உயர் சபை அவருக்குப் பதவியை வழங்கியதோ, அந்தச் சபையின் ஆலோசனையை அவர் நிராகரித்தால், அப்பதவியை அவரிடமிருந்து மீளப் பெறத் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.

Copyright © 2026. Created by Meks. Powered by WordPress.