Category மன்னார்

ஈஸ்டர்: பாதுகாப்பு மும்முரம்!

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஸ்டானங்களை நடத்தும் வடகிழக்கிலுள்ள தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை இராணுவத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி வழிபாடுகளும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மத வழிபாடுகளும் தேவாலயங்களில் நடைபெறவுள்ளன. அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு காவல்துறை பாதுகாப்பை செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதிக…

காற்றாலை, கனிம மண் அகழ்வு திட்டத்தை நிறுத்த வேண்டும் – சிவகரன்

மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து புதன்கிழமை (16) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும்…

புதைகுழிகள் பழகிப்போன தேசம்!

ஆர்ஜென்டீனா சிலி போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சிக்காலத்தில் பலர் கொல்லப்பட்டனர்.ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் மனித புதைகுழிகளைதோண்டும் விடயத்தில் மிகவும் நம்பகதன்மை மிக்க விதத்தில் செயற்பட்டனர்.பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தனர்.மனித புதைகுழிகள் அகழப்படும்போது பொதுமக்கள் பார்க்ககூடிய நிலை கூட காணப்பட்டது. ஆனால் எங்கள் நாட்டில் மனித புதைகுழிகளை தோண்டும்போது மக்களை ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லையென அம்பலப்படுத்தியுள்ளார் சிரேஸ்ட…

தலைமன்னாரில் 124 கிலோ கஞ்சா மீட்பு

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.  தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடையிலான கடல் பகுதியில், வட மத்திய கடற்படை…

சேவையாற்ற துடிப்பு :2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக  25 மாவட்டங்களிலும்  336 உள்ளுராட்சிமன்றங்களுக்காக சுமார் 2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. அவற்றில் 2260 குழுக்கள் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் 2900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…

மன்னாரில் விபத்து: ஒவர் பலி: மூவர் படுகாயம்!

மன்னார் – பள்ளமடு  பெரியமடு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (22)  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.  பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த  லொறி  வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில்…

பூநகரி மற்றும் மன்னாரிற்கு கால அவகாசம்!

தேர்தல் நடைபெறாதென முன்னர் அறிவிக்கப்பட்ட பூநகரி மற்றும் மன்னார் பிரதேசசபைகளிற்கான தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 3 பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும்…

மன்னார் காற்றாலை:வராது ஆனால் வரும்?

மன்னார் பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து இன்று (18) மீளப்பெறப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சீராக்கல் மனுவொன்றை சமர்ப்பித்து, திட்டம் வாபஸ் பெறப்படுவதாக இந்திய அதானி நிறுவனம்  இலங்கை முதலீட்டுச் சபையின்…

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக தமிழ் நேசன் அடிகளார் நியமனம்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார். மடு திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானத்தின் நிறைவில் வெள்ளிக்கிழமை (14) இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. ஒரு மறைமாவட்டத்தில்…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறங்கியது!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு   வடகிழக்கெங்கும் கூட்டாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனிடையே இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் போட்டியிட  மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  செலுத்தியுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளரும், ரெலோ கட்சியின்…