Category மன்னார்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்தியர் உள்ளிட்ட இருவர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில்  படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்தியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது படகினுள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் பயணித்தமையை அவதானித்த கடற்படையினர் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  அதன் போது…

இனவழிப்பிற்கு நீதி கோரி வடகிழக்கில் போராட்டம்!

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி  கந்தசாமி கோயில், மன்னார்…

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம்: ஆராயந்த அமைச்சர்கள்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கு அமைச்சர்கள் ஒருங்கிணைந்ததாக நேற்று(13) கள விஜயத்தை மேற்கொண்டனர். இதன்போது அரச திணைக்கள அதிகாரிகளால் பாலியாறு குடிநீர் திட்டம் தொடர்பான விளக்கம் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த திட்டம் நடை முறைப் படுத்தப்படும் பிரதேசத்தினை அமைச்சர்…

மன்னாரில் விபத்து – சிறுவன் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்

மன்னார் நானாட்டான் பிரதான வீதி நறுவிலிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் இடம் பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம் அடைந்திருந்த நிலையில் சிறுவனொருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நறுவிலிக்குளத்தில் இருந்து  தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் என நான்கு பேர் நானாட்டான்  நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை,  நானாட்டான் பிரதான…

மன்னாரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை மீண்டு திறந்து வைப்பு

மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம்  உடைக்கப்பட்ட நிலையில் குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம்  காலை திறந்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார்…

8 இந்திய மீனவர்கள் கைது!

தலைமன்னாரை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்போது, படகொன்றும் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தலைமன்னாருக்கு அழைத்து வரப்படுவதாகவும்,  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மன்னார் நகர அபிவிருத்திக்கு நிதியுதவி மிக அவசியம் – மன்னார் முதல்வர்

மன்னார் நகர சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க மத்திய அரசு நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று மன்னார் நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் நகர சபையில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர மக்களின் நலன் கருதியும்,…

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த  தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை  அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.                                           தந்தை செல்வாவின் சிலை…

கடற்படை வசமுள்ள காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என ரெலோ தலைவரும் வன்னி  பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முப்படையினர்…

மன்னாரில் கனிய மணல் அகழ்வு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.  மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  மன்னார்…