Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மட்டக்களப்பு, கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படம் , கறுப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தூபி ஒன்று சனிக்கிழமை (17) இரவு மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாவி ஊடாக சம்பவதினமான சனிக்கிழமை இரவு…
வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக இரவு சென்றவர் காலை வரையில் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற…
ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் கோத்தபாயவின் அச்சுறுத்தலையடுத்து பிள்ளையானை வழக்கிலிருந்து விடுவித்ததான குற்றச்சாட்டு விவகாரம் சூடுபிடித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு அவதூறு விளைவிக்கும் முகமாக முகநூல் உள்ளிட்ட சில…
பிள்ளையானின் அதி நவீன ஒரு தொகுதி ஆயுதங்களை மீட்டுள்ளதாகவும் ஒருவர் தானாகவே சென்று காட்டிக் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன. பிள்ளை யானின் அலுவலத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில் வைத்து பிள்ளையானைக் கைதுசெய்தபோது, அந்த…
ஒரு தாய் பெரிய அரச இயந்திரத்திற்கு எதிராக படைத் தளத்திற்கு எதிராக துணிந்து தன்னந்தனியாக நிராயுதபாணியாக நின்று தனது மன வலிமையை மட்டும் வெளிப்படுத்தி மக்களிற்காக இந்த தியாகத்தைச் செய்திருக்கின்றார் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம்…
பிள்ளையானின் அரசியல் ஆலோசகரான ஸ்டாலின் ஜானம் என்பவரின் மனைவியின் சகோதரரும் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனுக்கும் பிள்ளையானின் ஈஸ்டர் தாக்குதலுக்கும் பல தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை மற்றொரு சிறைச்சாலை உத்தியோகத்தர் நவநீதன் வெளிப்படுத்த முன்வந்துள்ளார். பிள்ளையான் யார் யாரை காட்டிக்கொடுக்கப்போகின்றார் என்பது தெற்கிலும் கிழக்கிலும் பேசப்படுகின்ற பரபரப்பான விடயமாகவுள்ளது. நல்லாட்சி காலத்தில் 2015ஒக்டோபர்…
பிள்ளையானின் சாரதி கைது! முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஸ்டானங்களை நடத்தும் வடகிழக்கிலுள்ள தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை இராணுவத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி வழிபாடுகளும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மத வழிபாடுகளும் தேவாலயங்களில் நடைபெறவுள்ளன. அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு காவல்துறை பாதுகாப்பை செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதிக…
சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு…
மட்டக்களப்பு, ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர். அடையாளம் காணப்படாத சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான…