Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான சந்தேக நபர்கள் 72 மணி நேரம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிள்ளையானின் நெருங்கிய கூட்டாளி என்று…
மட்டக்களப்பு வாகரை கருவப்பன்சேனை குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ள துயரச்சம்வம் இடம்பெற்றுள்ளது உறவினர்களுடன் மீன் பிடிக்கச் சென்றவேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பனிச்சங்கேணியைச் சேர்ந்த 12 வயதுடைய க.சானுஜன் மற்றும் 10 வயதுடைய க.டிக்ஷன் ஜெ.ருக்ஷானா ஆகிய மூன்று சிறுவர்கயே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் பணிச்சங்கேணி…
பிள்ளையானின் கூட்டாளியான “இனிய பாரதி” கைது! பிள்ளையானின் நெருங்கிய கூட்டாளியான “இனிய பாரதி” என்றும் அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான புதுப்பிக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து…
ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபை பிரிவில் மக்களின் 13 கோடி ரூபா செலவில் ஊழல் இடம்பெற்றுள்ளது என்று தமிழரசுக் கட்சியின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் செ.நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபையின் அமர்வு இன்று(27) இடம்பெற்ற போதே சபையின் கவனத்திற்கு இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கையில், எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும்…
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யபப்ட்டுள்ளனர். கடந்த 2023 ஒக்டோபர் 8 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல்…
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கங்களின் போது அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் உரிய சொத்துக்களை கொள்வனவு செய்ததாக எழுந்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள்…
மட்டக்களப்பில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றியுள்ளது.தமிழரசுக் கட்சியின் தவிசாளராக த.கோபாலபிள்ளை அவர்களும் பிரதி தவிசாளராக த. டிசாந்த் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ் தரப்புக்களை வடகிழக்கில் சபைகளில் ஆட்சியிலமர ஒத்துழைப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ள நிலையில் அக்கூட்டில் அங்கம் வகித்துள்ள தமிழீழ விடுதலை…
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக ஜக்கிய மக்கள் சக்தி ஆதரவுடன் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த ஊடகவியலாளரான சிவம் பாக்கியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால்…
‘டக்ளஸை தேவானந்தாவை தேடி சீ.வீ.கே.சிவஞானம் சென்றது நல்ல விடயம்.அதை நாம் வரவேற்கிறோம்.. இனி நாம் அனைவரும் சேர்ந்து செயற்படுவோமென கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.தனது கட்சி ஆதரவாளர்களில் உள்ளுராட்சி சபைகளிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களிற்கான பதவி பிரமாணத்தின் போதே கருணா தனது வரவேற்பை தெரிவித்துள்ளார். இதனிடையே கட்சிக்குள் இருப்பவர்களால் தொடர்ந்தும் தாக்கப்படுவதாகவும், நீதிமன்றம் சென்றாலும் அதனை…
மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலையில் காணாமல் போன சிறுவன் காத்தான்குடி குபா பள்ளி வாவிபகுதியில் முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர் . காத்தான்குடி 5 ஆம் குறிச்சி ஊர்வீதியைச் சேர்ந்த அனஸ்சுலைம் அப்துல்லாஹ் (06) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் காலையில் வீட்டை விட்டுச் சென்ற அவர்…