Category மட்டக்களப்பு

மட்டக்களப்பு உணவகங்களில் திடீர் சோதனை!

பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்  கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கடந்த 28 ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக  கல்முனை மற்றும்…

இனிய பாரதி தகவல் வழங்கினார்!

இனிய பாரதி தகவல் வழங்கினார்! சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் நெருங்கிய நண்பரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சந்தேக நபர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல்கள், கொலைகள் மற்றும்…

இனியபாரதியின் இரண்டாவது சகாவான தொப்பிமனாப் கைது!

இனிய பாரதியின் சககாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததுடன் அம்பாறை மாவட்ட தமிழ் பகுதிகளில் கடந்த காலத்தில் இனியபாரதி தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) கட்சியின் இயங்கி வந்த முகாங்கள் மற்றும் மயானங்களை  இரண்டு தினங்களாக…

இனவழிப்பிற்கு நீதி கோரி வடகிழக்கில் போராட்டம்!

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி  கந்தசாமி கோயில், மன்னார்…

மட்டக்களப்பில் விபத்து: இளைஞன் பலி!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்றைய தினம் அதிகாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை…

கல்முனையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்!

கல்முனையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்! பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துசெய்யுமாறு கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று கல்முனையில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர அம்மன் கோவில் பகுதியில் இன்று காலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை…

மட்டக்களப்பு புதைகுழி அம்பலம்!

இலங்கை கடற்படையினால் கிழக்கில் பேணப்பட்ட மனித புதைகுழிகள் பற்றிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. சிங்கள ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தி இறுதியில் மட்டக்களப்பில் கொலை செய்து புதைக்கப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் எக்னெலிகொட எவ்வாறு கொலை செய்யப்பட்டார், அவர் கொலை செய்யப்பட்ட இடம், உள்ளிட்டவற்றை முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இறுதியில் நியூசிலாந்துக்கு தொழில்…

பிள்ளையான் வெளியே வருவாரா?

பிள்ளையான் வெளியே வருவாரா? எதிர்வரும் செம்டெம்பர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ள நிலையில் பிள்ளையான்; பிணையில் விடுதலையாகலாமென தகவல்கள் வெளிவந்துள்ளன. செம்ரம்பர் மாதத்திற்கு முன்னர் பிள்ளையானுக்கான விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதவிடத்து அவர் பிணையில் செல்வது தவிர்க்கமுடியாததொன்றாகிவிடுமென சொல்லப்படுகின்றது. பிள்ளையானின் சகபாடிகளான இனியபாரதி முதல் மூவர் கைதாகியுள்ளதுடன்  சாட்சியங்களை சொல்ல…

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். கடந்த 10 வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி சீரமைப்பு ஊழியர்களாக பணியாற்றும் தற்காலிக நிலை ஊழியர்களே இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தங்களை இணைத்துக்கொள்ளும்போது எந்த கல்வித்தகமையும் கோராத…

றோகான் குணவர்த்தன -பிள்ளையானின் பினாமியா?

 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்  பின்னணியில் பிள்ளையான் தொடர்புபட்டுள்ளமை பற்றி கோத்தபாயவின் எடுபிடி றோகான்  குணவர்த்தன உள்ளதாக மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார். ரோஹான் குணரத்ன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக, அவர் சிறைக்குச் சென்று சேற்றில் மூழ்கி, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகந்தனை சந்தித்தார் எனவும் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பிள்ளையான்…