Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய நிழக்வாக மாறியுள்ளன. அந்தநிலையில், 2025 மே 16ஆம் திகதி, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் பகுதியில், மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.…
இலங்கை கடற்படையினர் கடந்த ஏப்ரல் 21 முதல் 28ஆம் திகதி வரை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடைக்காடு, புதுமாத்தளன், திருகோணமலை, கொக்கிளாய், சேப்பல் தீவு ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே…
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசு கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யார் பெரும்பான்மையாக வெற்றி…
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 25 மாவட்டங்களிலும் 336 உள்ளுராட்சிமன்றங்களுக்காக சுமார் 2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. அவற்றில் 2260 குழுக்கள் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் 2900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…
மூதூர், தாஹா நகரில் உள்ள வீடொன்றில் தமிழ் சகோதரிகளான பாட்டிகள் இருவரை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுமி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூதூர் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த காவல்துறையினர், கொலைகளைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் இறந்த பெண்களின் பேத்தி என்று கூறப்படும் சிறுமியை தற்போது…
மூதூரில் சகோதரிகள் வெட்டிக் கொலை மூதூர் – தஹாநகரில் வயோதிபர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சகோதரிகளான 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பெண் மருத்துவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்: திருகோமலையில் போராட்டம்! மதுரி Wednesday, March 12, 2025 திருகோணமலை, முதன்மைச் செய்திகள் அநுராதபுரத்தில் பாலியல் துன்புறுத்தல் உட்படுத்தப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரியும், அவருக்கெதிராக இடம்பெற்ற குற்றச் செயலை கண்டித்தும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்திய…
திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை (07) காலை நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும், நியமனத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறுவனத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் கடந்த வருடம் சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் அமைய அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட குறித்த ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கடமையாற்றும்…
மினுவங்கொடையிலிருந்து சேருவில நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, மூதூரில் பாரவூர்தியுடன் மோதியதில் 18 பெண்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மூதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடையைச் சேர்ந்த பக்தர்கள் சேருவில பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. விபத்துக்குள்ளனது.
வெருகல் முகத்துவாரம் – சூரநகர் பகுதியிலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று சனிக்கிழமை (01) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 400 மீற்றர் தூரம் கொண்ட இவ் வீதியானது பள்ளமும், குழியுமாக காணப்படுவதோடு இவ் வீதியால் பயணிக்கும் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் அசௌகரிகளுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர். இந்நிலையிலேயே…