Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினுடைய தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராசா தனராஜ் என்பவரை அக்கட்சி பிரேரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை(08) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த தெரிவானது…
திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீனவத்தொழிலுக்காக கடலுக்குச்சென்ற அப்பாவிகள் மீது கடற்படை; அத்துமீறி நடப்பதை…
திருகோணமலையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கி சூடு – ஒருவர் படுகாயம் திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். திருகோணமலை – குச்சவெளிப் பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீதே கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் எனவும், துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமுற்ற நிலையில்…
திருகோணமலையின் வாகனம் மோதி முதியவர் உயிரிப்பு திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி 72 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் கனரக வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (30) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை…
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10,000 ரூபாய் இலஞ்சமாக கோரியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது…
இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸிற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த பிரகாரம் திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி தனது தரப்பின் பெயரை அறிவித்துள்ளது. திருகோணமலையின் புதிய மாநகர சபை உறுப்பினரான கந்தசாமி செல்வராஜாவின் பெயரை தமிழரசுக்கட்சி முதல்வர் பதவிக்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
உள்ளுராட்சி சபைகளிற்கு பிரேரிக்கப்படும் பெண் உறுப்பினர்கள் விபரங்களை எதிரவரும் 30ம் திகதியினுள் சமர்ப்பிக்க தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் காலக்கெடு விதித்துள்ளது. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் சிறீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு…
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய…
வடகிழக்கு எங்கும் புத்தர் மீண்டும் ஆமோகமாக பயணத்தை ஆரம்பித்துள்ளார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க…
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக வீதியின் சந்திக்கு அருகே நகரத்தில் இருந்து வெளியேறிய சிற்றூர்தி, நகரை நோக்கி பயணித்த கொண்ட உந்துருளியும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்திற்கு சற்று…