Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
திருகோணமலையினை பௌத்தம் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக தடைகளை விதிக்க தமிழ் அரசியல் தரப்புக்கள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அவ்வகையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாhரின் நேரடி ஆய்வின் பின்னரே கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.…
திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின்முன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலஸ்தோட்ட பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தில், வெளிநாட்டுப் பெண்ணிடம் சில நபர்கள் தகாத முறையில் தொட முயன்றுள்ளனர். குறித்த விடயத்தை அவரது…
திருகோணமலை செல்வநகரில் புகுந்த யானைகளின் அட்டகாசம்! திருகோணமலை, தோப்பூர் – செல்வநகர் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதன்போது காய்த்து பலன்தரக் கூடிய சுமார் 10 தென்னை மரங்கள் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊருக்குள் வந்து காட்டு யானைகள் இவ்வாறு சேதம் விளைவித்துள்ளமையால் ஊருக்குள் இருக்கின்ற மக்களும்…
செம்மணி மனிதபுதைகுழி “அணையா விளக்கு” போராட்டம் திருகோணமலை சிவன் கோவிலடியில் நேற்று (25) மாலை உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனிதபுதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி மக்கள் செயல் அமைப்பினரால் கடந்த மூன்று நாள்களாக “அணையா விளக்கு” போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் இறுதிநாளான நேற்று அனைவரையும் ஒன்று கூடி சர்வதேச நீதியைக் கோர வேண்டும் என…
திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதிப்புகளை பாதாகைகளில் படங்களின் மூலமாகவும் வாசகங்கள் மூலமும் காட்சிப்படுத்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில்…
திருகோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலைக்கெதிராக குரல் எழுப்பிய இளைஞன் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள விகாரதிபதியின் முறபை;பாட்டையடுத்து கைதாகியுள்ளார். இந்நிலையில் திருகோணமலை- மூதூர் 3ம்கட்டைமலை புத்தர் சிலை விவகாரத்தால் விகாராதிபதியின் முறைப்பாட்டில் கைதான இளைஞனுக்கு நேற்று புதன்கிழமை (18) அன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. மூதூர் 3ம் கட்டை மலை விகாராதிபதி, அ.ரமேஸ் என்பவருக்கு எதிராக மூதூர் காவல்நிலையத்தில் செய்த…
திருகோணமலையின் தங்கநகர் பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் சேருவில வைத்தியசாலையின் வைத்தியர் கெல்வின் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்; வெளிவந்துள்ளது.தமிழ் பொதுமக்கள் பலருடைய உயிரை காப்பாற்றிய வைத்தியர் கெல்வின் அவர்களே இன்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். தன்னுடைய மனைவி பிள்ளைகளை இரத்தினபுரியில் இருந்து பிரிந்து 1990 ம் ஆண்டு முதல் அவர்…
யாழ்ப்பாணத்தில் மட்டுமே சீ.வீ.கே.சிவஞானம்-எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டை தமிழரசு பேண முற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி தொடங்கி வவுனியா,முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையென கைகள் கடந்து செல்ல தொடங்கியுள்ளது. இதனிடையே வவுனியாவை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற…
திருமலையில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதத்தை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – ஈச்சிலம்பற்று முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இன்று (14) காலை பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து எந்தவித…
திருகோணமலையில் தமிழ் மக்களை விரட்டியடிப்பதில் முனைப்பு காண்பித்து வரும் சிங்கள பேரினவாதம் தற்போது முஸ்லீம்களை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது.மரணித்த முஸ்லீம் ஒருவரது உடல நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் பதற்றமான சூழ்நிலை தோன்றியிருந்தது. திருகோணமலை குச்சவெளி புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியில் இன்று ஆண் ஒருவர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உடலத்தை நல்லடக்கம் செய்வதற்கு மயானத்திற்காக…