Category திருகோணமலை

சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு: 06ஆம் திகதி விசேட மாநாடு!

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது வழக்கு மாநாடு ஒன்றிற்காக எதிர்வரும் 06ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கானது கடந்த தவணை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலுக்கு அமைய…

கன்னியாவில் கட்டைப்பஞ்சயாத்து!

திருமலையின் கன்னியா பகுதியை ஆக்கிரமித்துவிட பௌத்த அமைப்புக்கள் தொடர்ந்தும் முனபை;பு காண்பித்தேவருகின்றன. இந்நிலையில் வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில், ஆடி அமாவாசை பித்ரு கடமைகளை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கவிடாது பௌத்த பிக்கு ஒருவர் அடாவடியில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது. சிவன் கோவிலில் ஆடி அமாவாசை பிதுர்கடன் நிறைவேற்றுவதற்கான பூஜைகள் வரை நடத்துவதற்குரிய அனுமதி உத்தியோகபூர்வமாக ஏற்பாட்டுக் குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்தது.…

சம்பூரில் புதைகுழி!

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்ததையடுத்து கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் – சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக கண்ணிவெடி அகழும் பணி…

சம்பூரில் மிதிவெடியகற்றும் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு!

திருகோணமலை, சம்பூர் கடற்கரைப் பகுதியில் மிதிவெடி அகற்றும் இடத்திலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பூர் – சிறுவர் பூங்காவை அண்டிய கடற்கரைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதியிலிருந்து மெக் நிறுவனத்தினால் மிதிவெடி அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மூன்றாவது நாளாக இப்பணி முன்னெடுக்கப்பட்டது.…

திருகோணைமலையில் வணிக நிலையங்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை

திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மட்டிக்களி, மட்கோ  நீதிமன்ற வீதி, தபால் கந்தோர் வீதி போன்ற பிரதேசங்களில்  உள்ள 33 வியாபார நிலையங்களில்…

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி திருகோணமலையில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெறவிருந்த வேளையில், மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைபடுத்த வேண்டும் எனக் கோரி பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல வருட காலமாக கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கின்றபோது,…

தியாக தீபத்தின் ஊர்தி மீது தாக்குதல் – பாதிக்கப்பட்ட தரப்பை விசாரணைக்கு அழைத்துள்ள TID

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கி வந்த ஊர்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த இளைஞனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.  திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான  கனேசலிங்கம் சிந்துஜன் (வயது 35) என்பவரையே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனர்  கடந்த 2023 ஆம் ஆண்டு…

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று காலை பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக, எதிர்புப்  பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்னுமொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம்; பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு,  அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்புக்காய்…

கன்னியா கட்டடங்களிற்கு தடை!

திருகோணமலையினை பௌத்தம் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக தடைகளை விதிக்க தமிழ் அரசியல் தரப்புக்கள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அவ்வகையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாhரின் நேரடி ஆய்வின் பின்னரே கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.…

திருகோணமலையில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின்முன்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் துரத்தி துரத்தி  தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அலஸ்தோட்ட பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில்  நடைபெற்ற விருந்தில், வெளிநாட்டுப் பெண்ணிடம் சில நபர்கள் தகாத  முறையில் தொட முயன்றுள்ளனர். குறித்த விடயத்தை  அவரது…