Category தமிழ்நாடு

செம்மணி புதைகுழி: சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் – சத்தியராஜ்

செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகரும் தமிழ்த் தேசிய உணர்வாரும் தமிழீழ ஆதரவாளருமான சத்தியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட.…

34 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய மாலுமி சிவத்தம்பி!

தமிழக சிறைகளில் கடந்த 34வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த மாலுமி சிவதம்பி நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் இன்று தாயகம் வந்தடைந்துள்ளார்.  கடந்த 1991இல் சர்வதேச கடல் பகுதியில் வைத்து இந்திய கடற்படையால் வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்ட கப்பலில் இருந்த சிவத்தம்பி  உள்ளிட்டவர்கள் மீது தடா வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில்   சிறையிலும், விடுதலையாகி சிறப்பு முகாமிலும் இருந்தவர்.…

கச்சதீவிற்கு 9ஆயிரம் யாத்திரிகர்கள்!

கச்சதீவு பெருந்திருவிழாவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் இலங்கையின் 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் அனுமதிக்கப்படவுள்ளதுடன் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் என ஆயிரம் பேருமாக 9 ஆயிரம் பேர் வருகைதரவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள்…

மீண்டும் கப்பல் காணாமல் போய்விட்டது!

பெரும் பிரச்சாரங்களுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல் சேவை, கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மோசமான வானிலையைக் கருத்திற் கொண்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கப்பலை இயக்க…